பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


காதல் எங்கே ! 85 பானுமதி : உண்மையான அன்பிருக்கும்போது அதை யாவது பேசலாமல்லவா ? சதாசிவம் : எதுக்குப் பேசவேனும் ? அது தானகவே தெரியாதா ? சொல்லித் தெரிகிற அன்பு அது கொஞ்சம் குறைச்சலானதுதான் என்பது என் னுடைய அபிப்பிராயம், பானுமதி : அண்ணு, உங்களிடத்திலேயும் நான் இதைப் பற்றிப் பேச முடியாது ; லலிதாவிடத்திலும் பேச முடியாது. இரண்டு பேருடைய அபிப்பிராயத்தையும் மாற்றவே முடியாது போங்கள். சதாசிவம் : பானுமதி, நீ அதைப்பற்றிக் கவலேப்படாதே. லலிதா தன் அபிப்பிராயம் சரியல்லவென்று நிச்சயம் தெரிந்து கொள்ளுவாள். பானுமதி : அதுவரைக்கும் எல்லாம் கோணலில்லாமல் நடக்க வேணுமே அண்ணு ? சதாசிவம். அதிலே எனக்குத் துளிகூடச் சந்தேகமில்லை. அந்த அளவுக்கு நான் லலிதாவை அறிந்திருக்கிறேன். பாலுமதி சரி அண்ணு, பார்ப்போம். எனக்கென்னவோ கொஞ்சம் கவலையாக இருக்கிறது. சதாசிவம் : கவலேயே வேண்டாம். எங்கே லலிதாவை இன்னும் காளுேமே ? பானுமதி : இதோ பார்த்து வருகிறேன்...லவிதா. (கூப்பிட்டுக்கொண்டே உள்ளே டோகிருன் ,