பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் எங்கே ! 87 தாமோதரன் ஒவியமாக வரைந்திருக்கிருர்-நீ அதைக் கட்டாயம் பார்க்க வேணும். பானுமதி : தாமோதரனு ? லலிதா : ஆமாம்-கடற் காட்சிகளே ஒவியமாகத் தீட்டு வதற்காகவே அவர் சென்னையில் தங்கியிருக்கிறார். பானுமதி : லலிதா, உங்கள் வீட்டிலே ஒரு அறை முழுவதும் பார்சல்களும் பெட்டிகளும் போட்டிருக் கிருயே ? அவையெல்லாம் என்ன ? லலிதா : அவையெல்லாம் ஒவியம் தீட்டுகிற சாமான்கள். அந்தப் பெட்டிகளிலே இருப்பதெல்லாம் வர்ணங்கள். பானுமதி : என்ன, நீயும் ஒவியம் தீட்ட ஆரம்பித்து விட்டாயா ? லலிதா (சிரித்துக்கொண்டே) ; இல்லே பானு, தாமோ தரனுடைய பெட்டிகள் அவை. அவருடைய அறையிலே புதிய ஓவியங்கள் நிறைய இருப்பதால் வைப்பதற்கு இடமில்லை என்று இங்கே வைத்திருக் கிறார். பானுமதி : வர்ணப் பெட்டிகளா அவையெல்லாம் ? என்னவோ சாராய நாற்றம் அடித்ததே ? லலிதா (மேலும் சிரித்துக்கொண்டே) : பானு, உனக்கு ஒவிய வர்ணங்களைப்பற்றி ஒன்றுமே தெரியாது. ஸ்பிரிட்டில்தான் அவற்றைக் கலக்கியிருப்பார்கள். அதுதான் அந்த வாசனை. பானுமதி : இருந்தாலும் இத்தனை பெட்டிகளில் வர்ணம் வைத்திருப்பதை நான் கண்டதில்லை-ஒருவேளை நவீன ஒவியத்துக்கு இப்படியெல்லாம் வேணுமோ