பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


94 காதல் எங்கே ! சரோஜா : ஆமாம்-தனது வாழ்க்கையிலே கணவனிடம் காண முடியாதவற்றை யெல்லாம் மகனிடம் கான ஆசைப்படுகின்ற தாயைப்பற்றிப்படித்திருக்கிறேன். பானுமதி : அப்படிப்பட்ட ஒரு வகையான பயித்தியந் தான் லலிதாவையும் பிடித்துக் கொண்டிருக்கிறது. தனியே சந்தித்துக் காதல் கொள்ளுவது, ரகசிய மாகச் சந்திப்பது என்றிப்படியெல்லாம் அவள் வாழ்க்கையிலே நடக்கவில்லை. சரோஜா : அந்த ஆசையா இப்படி வெளியாகிறது ? பானுமதி அதிலும் வேடிக்கை யென்னவென்ருல், தாமோதரனைப்பற்றி லலிதாவுக்குக் கொஞ்சம்கூட மதிப்பில்லை. அவனை ஒரு தனி மனிதனுகவே அவள் கருதவில்லை. சரோஜா : அதெப்படி முடியும் பானு ? பானுமதி : அதுதானே வேடிக்கை. தாமோதரன் ஒரு வியாஜந்தான். அவன் ஒரு உயிரில்லாத கருவி. அவன் மூலம் லலிதா சதாசிவத்தையே பார்க்கிருள். சரோஜா : என்னமோ பானு, நீ சொல்லுவது எனக்குப் புதிராகத்தான் இருக்கிறது. கொஞ்சமும் புரிய வில்லை. பானுமதி : யாருக்குமே இப்போ புரிவது கஷ்டந்தான். ஆளுல், லலிதாவின் பிரமை சீக்கிரத்தில் சிதறிப் போய்விடும். சந்தேகமேயில்லை. சரோஜா : அப்படித்தான் நடக்க வேணும்னு நான் ஆசைப்படுகிறேன். பானுமதி : அதைத்தான் நானும் எதிர்பார்த்திருக் கிறேன். அண்ணு சதாசிவமும் அதைத்தான் எதிர் பார்க்கிருர்,