பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 இளமையின் நினைவுகள் தங்கினுேம். திருவாளர் ரீபால் அவர்கள் முயற்சியால் எங்களுக்கெல்லாம் நல்ல விருந்துக்கு ஏற்பா டாகி இருந்தது. அன்ருே அல்லது மறு நாளோ வேருேரு இடத்தில் எப்படியாவது மற்ருெரு முறை நாடகத்தைச் சென்னையில் நடிக்க வேண்டும் என்று அப்பா முயன்று கொண்டிருந்தார்கள். என்ருலும் முடியவில்லை. எனவே மறுநாள் காலையில் நாங்கள் திரும்பி வாலாஜாபாத் துக்குப் புறப்பட்டோம். - வரும் வழியில் மாணவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் உட்கார முடியவில்லை. மாநாட்டுக்கு வந்து அப்படியே சென்னை வேலைகளையும் முடித்துவிட்டுத் திரும்பும் மக்கள் இரெயிலில் அதிகம். எனவே அங்கங்கே நாங்கள் பிரிந்து ஏறிக்கொண்டோம். அத்துடன் வழியில் அப்போதுதான் மி ன் சா ர பாதைகளுக்கான வேலைகளும் தொடங்கப் பெற்றிருந்ததென நினைக்கிறேன். அடிக்கடி இரெயில் நின்று நின்று வந்தது. எங்களுடன் வந்த நண்பர் ஒருவர் - என் வகுப்பில் படித்தவர்தான் என நினைக்கிறேன் - தீடீரென வண்டியில் இருந்து இறங்கி வேறு பெட்டிக்கு மாறப்போர்ை. அதற்குள் இரெயில் புறப்பட்டுவிட்டது. அவர் பாவம் - அந்தச் சிறு வயதில் ஒன்றும் செய்ய முடியாது 'ஒ' வெனக் கதறினர். அனைவரும் எட்டிப் பார்த்தோம். ஆசிரியர்கள் அவர் பெயர் சொல்லி அழைத் தர்ர்கள். அந்த ஆரவாரத்தையும், இளம் பிள்ளை அவ்வாறு அழுவதையும் கண்ட கார்டு வண்டியை மறுபடியும் நிறுத்தினர். வந்த ஆசிரியருள் ஒருவர் இறங்கி அவரை இழுத்து வண்டியில் ஏற்றிக் கையால் முதுகையும் பதம் பார்த்தார் என நினைக்கிறேன். எப்படியோ அவரைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அவர் பெயர் எனக்கு நினைவில்லை. முடிவாக வாலாஜாபாத் வந்து சேர்ந்தோம்,