பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடிந்த கோயில் 111 இவ்வாருன பழம்பெரும் ஊராக விளங்கும். எங்கள் ஊரில் சமணர் சில ஒன்றைத் தவிர வேறு சமணச் சார்புடைய கோயில்கள் ஒன்றும் கிடையா. என்ருலும் எங்கள் ஊருக்குக் கீழ்க்கோடியில் ஊரையெல்லாம் விட்டுத் தள்ளிச் சற்றுத் தூரத்தில் ஒரு பாழான கோயில் ஒன்று உள்ளது. நான் மேலே கூறிய விழாக்கள் நிறைந்த போட்டியால் தேர்வு நடைபெறும் கோயில் ஊர் இடையில் எங்கள் விட்டுப் பின் பக்கத்தில் இருக்கிறது. அது கட்டப் பெற்று ஒரு சில நூற்ருண்டுகளே கழிந்திருக்க வேண்டும். ஆனல் ஊர் எல்லைக்கு அப்பால் இருக்கும் அந்தப் பழங் கோயிலோ பிற்காலச் சோழர் காலத்தில் கட்டப்பெற்று இருக்கவேண்டும். மிகப் பெரியதாக இருந்து, காலப் போக்கில் அது அழிந்த நிலையில் குறுகி இருக்க வேண்டும் என நினைக்கவேண்டியுள்ளது. பாலாற்றங் கரையில் இருக்கும் அந்தக் கோயிலின் எல்லையை அந்த ஆற்று வெள்ளமே சிறுகச் சிறுகப் பதம் பார்த்து விழுங்கி இருக்க வேண்டும். அக் கோயிலுக்கு ஒரு கல் தொலைவிற்கு உள்ளேயே இருக்கும் திருமுக்கூடலில்தான் பிற்காலச் சோழர் காலத்திய பெருங் கோயில் ஒன்று இருக்கிறது. அதில் உள்ள கல்வெட்டு மூலம் அங்கு பலர் மருத்துவம் பெற்ற படுக்கைகளோடு கூடிய ஒரு மருந்தகமும் ஒரு கல்லூரியும் அச் சோழர் காலத்தில் இருந்ததாக அறிகிருேம். ஒருவேளை இந்தச் சிறிய கோயிலும் அக்காலத்தில் கட்டிய தாகவே இருக்கலாம். சுற்றுச் சு வ ர் க ள் ஒன்றும் இன்றேனும், உட்புறச் சுவரில் சிற்சில கல்வெட்டுக்கள் காண்கின்றன. அவற்றையெல்லாம் அரசியல் தொல் பொருள் ஆராய்ச்சியாளர் வந்து கண்டு எடுத்துச் சென்ருர்கள் என அறிந்தேன். பின்னர் அவைகளைப்பற்றி