பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 இளமையின் நினைவுகள் அந்த அலுவலகத்தில் விசாரித்தபோது யாதொரு தகவலும் கிடைக்கவில்லை. எடுத்த கல்வெட்டுப் படிகள் என்னுயிற்றே! யார் அறிவார்? - கோயில் அமைப்பு மிகச் சிறியது. ஆற்றங் கரையை ஒட்டி அமைந்த கோயில் அது. ஆற்றில் கரை ஓரமாகக் கோயிலை ஒட்டிச் சில சமயங்களில் சிற்றருவி ஒன்று ஒடிக் கொண்டிருக்கும். கோயிலை மேலும் ஆற்று வெள்ளம் அடித்துப் போகாதபடி கரையில் கற்களை இட்டுச் சிறிது தூரம் கரை கட்டி இருந்தார்கள். இடிந்த கோயில்களி லிருந்து பலப்பல கற்கள் நாற்புறமும் சிதறிக் கிடந்தன. இப்போதும் பல கற்கள் அங்கே அப்படியே வீழ்ந்து கிடக் கின்றன. அந்த இளமைக் காலத்தில் நானும் என் நண்பர் மற்ருெருவரும் அங்கு அடிக்கடி செல்வதுண்டு. மாலையில் பள்ளிக்கூடத்திலிருந்து வந்த பிறகு அங்கே சென்று உட்கார்ந்து கொண்டு எதை எதையோ பேசிக்கொண் டிருப்போம். அந்தக் கற்களும் எங்களுக்கு எத்தனை எத்தனையோ கதைகளைச் சொல்லிக்கொண்டிருக்கும். சில நாட்களில் பொழுது போவது தெரியாமல் நன்கு இருட்டும் வரையில்கூட இருந்து பேசுவோம். அந்தக் கோயிலின் உள்ளே ஒரு சிவலிங்கம் மட்டும் இருந்தது. அதற்கு யாரும் பூசை செய்வது கிடையாது. சில ஆண்டுகளுக்குப் பின் யாரோ அதற்குக் குடமுழுக்கு செய்து ஒருவேளை பூசைக்கு ஏற்பாடு செய்தார்கள் என அறிந்தேன். ஆயினும் தற்போது அதுவும் நடைபெற வில்லை என நினைக்கிறேன். இக் கோயில் மிகப் பழங் காலத்தில் கட்டப்பட்டதாம். எங்கள் ஊர் இரு பிரிவாகத் தனித் தனியாக இருந்து, பிறகு காலப் போக்கில் ஒன்ருக இணைந்த ஊராம். அதில் எங்கள் தெரு தான் தனி