பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 இளமையின் நினைவுகள் மறுநாள் மாலை அங்கு செல்லும் போது கையில் ஒரு குடத்துடன் சென்ருேம். பக்கத்திலிருந்த ஒடையில் நீர் முகந்து கொண்டு வந்து மண் மூடியிருந்த அந்தச் சிலை யின் மீது ஊற்றினுேம், பல நாளாகப் பிடித்து மூடிய அந்த மண் சிறுகச்சிறுக ஊறிக் கொண்டு வந்தது. சிறிது சிறிதாக எல்லா மண்ணையும் கல்லி எடுத்துவிட்டோம், பிற கு நோக்கும் போது அது ஒரு திருமால் உருவாகக் காட்சி அளித்தது. இருபுறமும் சங்கும் சக்கரமும் தோன்ற முகமும் களையோடு பொருந்தியது. உயரம் சுமார் நான்கடி இருக்க ಉTಹಿ அந்த உருவை நோக்கி நான் இரக்கப்பட்டேன், பாவம் எந்தக் காலத்தில் யாரால் செய்யப் பெற்றதோ ! எத்துணைபேர் பக்தியோடு போற்றிப் பாடினர்களோ, இன்று இத்தனை ஆண்டுகளாகக் கேட்பாரற்று முகத்தை மண்ணுள் புதைத்துத் தன்னையே மறந்து வாழவேண்டிய நிலை இச் சிலைக்கு ஏற்பட்டதே' என நினைத்து உண்மையில் வருந்தி னேன். மக்களுள்ளும் ஒரு சிலர் சில காலத்தில் உயர்ந்து வாழவும் அவர்களே காலப் போக்கில் இருக்கும் இடம் தெரி யாமல் நிலை கெடவும் காண்கின்ருேம். கடவுளரும்-அவர் உருவம் தாங்கிய சிலைகளும் கூட இவ்விதிக்கு உட்பட்ட னவே போலும் என நினைத்தேன். அந்தச் சிலையை அப்படியே விட்டுவைக்க எனக்கு மன மில்லை. அங்கே அந்தக் கோயிலிலோ யாதொரு பூசனையும் கிடையாது. எனவே அதை எப்படியாவது அப்புறப்படுத்தி நல்ல இடத்தில் வைக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். நண்பர் பலருடன் பேசினேன். எங்கள் தெருக் கோடியில் ஒரு மாரியம்மன் கோயில் இருந்தது. அதன் ஒரு பக்கத்தில் தனியாக அதைக் கொண்டு வந்து