பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடிந்த கோயில் 115 வைக்க முயன்றேன். பெரியவர்களில் சிலரும் அவ்வுரு வத்தை வந்து கண்டபின் அதன் முகத் தோற்றத்தால் கவரப் பெற்றனர். பின்னர் அவர்களே முன்னின்று அதைக் கொண்டுவந்து மாரியம்மன் கோயில் தாழ்வாரத்தில் நிற்க வைத்தனர். அன்று முதல் நானும் என் நன்பர்களும் அதற்கு எண்ணெய் முழுக்கு முதலியன செய்து வந்தோம். விரைவில் அது கோயிலில் உள்ள திருமாலே என்னுமாறு அழகுடன் பொலிந்தது. பிள்ளைகளாகிய நாங்களே அதற்கு மாலைகள் இட்டும், பிற பண்டங்கள் ப ைட த் தும், வேடிக்கையாக விழாக்கள் நடத்தி வந்தோம். இதே முறையில் வேறு இரண்டொரு கற்சிலைகளும் கூட அந்த இடிந்த கோயிலில் இருந்து கொண்டுவரபபட்டு, சேர்த்து வைக்கப்பட்டன. என்ருலும் அந்தத் திருமால். சிலைக்குக் கிடைத்த பெருமை பிற சிலைகளுக்குக் கிடைக்க வில்லை என்னலாம். இன்று அந்தத் திருமால் சிலை எங்களுர் அம்பலவாணர் கோயிலின் வடக்குச் சுற்று வழியில் ஒரு முக்கியமாள இடத்தில் பொருத் தப் பெற்று வழிபடுகின்ற அன்பர்களுக்கு வரம் தரும் கடவு ளாக பிற தெய்வங்களோடு தெய்வஉருவாக, சிறப்போடு பூசண் ஏற்று நிமிர்ந்து நிற்கின்றது. கோயிலுக்கு நான் செல்லும்தோறும் அங்குச் சில நிமிடங்கள் என்னை மறந்து நிற்பேன். அந்தச்சிலையை அக்கோயிலில் கொண்டுவைக்கும் போது நான் ஊரில் இல்லை. எப்படியோ யாருடைய முயற்சி யாலோ அது உள்ளிடம் பெற்றுவிட்டது. என்ருலும் என்னை அந்தச் சிலை ஈர்த்துக் கொண்டது, அதன் அருகில் செல் லும் போது அப்படியே நிற்பேன். அது வாய் திறந்து பேசு மானுல் மண் மூடிக் கிடந்த தன்னை நிமிரச் செய்து இந்த நிலைக்குக் கொணர்ந்த என்னை வாழ்த்தாதிருக்குமா! . எனக்கு வேண்டாம் அந்த வாழ்த்தும் போற்றலும். ஆயி