பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 இளமையின் நினைவுகள் னும் அவ்வுருவைக் காணும் தோறும் என் உள்ளங்குளிரும். எந்தக் காலத்தில் யாரால் செய்யப்பெற்ற உருவமோ அது. அந்தக் காலத்தில் எத்தனை பேர் அதன் மலரடியில் தவங் கிடந்து வரம் பெற்ருர்களோ ! இடையில் அதன் நிலைகெட மண்ணுள் மூழ்கி எத்தனை ஆண்டுகள் அது தவம் கிடந் ததோ! இதோ இன்று மறுபடியும் அச்சிலை வரந்தரு தெய்வமாக அம்பலவாணர் திருக்கோயிலில் அழகுறவிளங்கு கிறது. அதே வேளையில் இன்னும் நிலை இழந்த தெய்வச் சிலைகள் பல அந்த இடிந்த கோயிலைச் சுற்றிக் கிடக்கின்றன; அவைகளை நோக்க இரக்கம்தான் வருகிறது. இப்போது நான் அடிக்கடி ஊருக்குப் போவதில்லை. போகும்போதெல் லாம் அந்த இடிந்த கோயில் பக்கம் செல்ல வேண்டும் என நினைப்பதுண்டு; முடிவதில்லை. என்ருலும் வழியிலே உள்ள சோலைகளை யெல்லாம் மக்கள் வெட்டி வீழ்த்திவிட்டமையால் எங்கள் வீட்டு வாயிற்படியிலிருந்தே அந்தக் கோயிலைக் காணமுடியும். நான் தெருவில் சில விநாடி நின்று, அக் கோயிலை வணங்கி உள்ளே செ ல் வேன். ஆம்! அந்த இடிந்த கோயிலும் அதில் உள்ள கல்வெட்டுகளும், நிலை கெட்ட சிலைகளும் எத்தனை எத்தனை உண்மைகளைத் தம்முள் மூடிவைத்திருக்கின்றனவோ? யார் அறிவார்! စ္စိ၌