பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தாத்தாவின் கதைகள்



11



மட்டும் அதற்காக அமைக்கப்பெற்ற மண்டபத்தில் நடை பெற்றுக்கொண்டு வருகிறது.) அந்த வனபோசனம் மாலை மூன்று மணிக்கு நடக்கும். அதுவரை தாத்தா சாப்பிடாமலா இருப்பார். இல்லை; காலை ஒன்பது மணிக்கெல்லாம் அவரும் நானும் வீட்டில் சாப்பிட்டுவிடுவோம். இரண்டு மணிக்குத் தோப்புக்குச் செல்வோம். அந்தப் பிராமணர்களெல்லாம் சாப்பிட்டு வருவார்கள். வந்தபிறகு எல்லோரும் ஒரு இடத்தில் உட்காருவார்கள். குறைந்தது ஐம்பது அறுபதுபேருக்கு மேல் இருப்பார்கள்; பெண்களும் குழந்தைகளும் கூட இருப்பதுண்டு. பிறகு அவர்களுக்கெல்லாம் வெற்றிலைப் பாக்குத் தருவார்கள். அதில் ‘தட்சணை’ என்று இரண்டணா, நான்கணா வைக்கப்பெற்றிருக்கும். அத்துடன் வாழைப் பழமும் பொடிப்பொட்டலமும் வைத்திருக்கும். இதெல்லாம் எதற்கு என்பது எனக்குத் தெரியாது. பெண்களும் பிள்ளைகளும் கூடப் பொடிப்பொட்டலம் எடுத்துக்கொள்வார்கள். இப்பொடி எல்லாம் எதற்கு என்று நான் தாத்தாவைக் கேட்பேன். அவர் ஏதாவது பதில் சொல்லி இருப்பார். அது என்னவாயிருக்குமென்று கூட இன்று என்னால் ஊகிக்க முடியவில்லை. என்றாலும் பின்னால் இப்படியா பொடியும் புகையிலையும் வாங்கிக்கொண்டு ஒரு வனபோசனம் பெறுவார்கள் என்று நான் நினைப்பதுண்டு. அன்றைக்கு எனக்கு பொடி புகையிலை எல்லாம் பெறுதல் கெட்டசகுனம் என்பது தெரியாது.

பிராமணர்களுக்கு எல்லாம் கொடுத்தபிறகு அவர்கள் காலில் விழுந்து தாத்தா ‘கும்பிடு’வார்கள். நானும் உடன் கும்பிடவேண்டும். பிறகு அவர்கள் போய்விடுவார்கள். உள்ளே சமையல்செய்த ஐயர் ‘சித்திரான்னங்’களையும் வடை பாயாசம் முதலியவற்றையும் கொடுப்பார், நாங்கள் எடுத் கொண்டு அருகிலிருக்கும் ஆற்றுக்கால்வாய்க்குச் செல்