பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயங்கர 119 டேன். என் வகுப்பிலே பயிலும் சில மாணவர்கள் என் வீட்டுக்கு அருகிலேயே குடியிருந்தார்கள். அவர்களும் என்னைப்போலக் கிராமங்களிலிருந்து படிக்கும் பொருட்டா கவே அங்கு வந்து குடியிருந்தவர்கள். அவர்களோ டெல்லாம் கலந்து ஓரளவு பயின்று கொண்டே வந்தேன் என்று தான் சொல்ல வேண்டும். குடியிருந்த வீடு ஒரு சிறு அறைதான். இரவில் மற் ருெரு பக்கத்தில் இருந்த தாழ்வாரத்தில் படுத்துக் கொள் வேன். பாட்டியார் அந்த அறையிலேயோ, அதற்கடுத்த சிறு தாழ்வாரத்திலேயோ படுத்துக் கொள்வார்கள். பரந்த பெருவீடுகளில் பழக்கப்பட்டு வாழ்ந்த எங்களுக்கு அந்தச் சிறு அறை வாழ்க்கை மிக்க துன்பத்தைத் தான் கொடுத்தது. என்ருலும் அதற்கு மேல் எங்களால் ஒன்றும் செய்ய முடி யாதே! இன்று கல்விக்காக ஆயிரக் கணக்கில் செலவிடும் பல மாணவர்களைக் காண்கிறேன். ஆனல் அன்று பொது வாக அத்துணைச் செலவு செய்தவர் இல்லை என்றே எண்ணு கிறேன். மேலும் எனது அன்னையார் திங்களுக்கு இவ்வளவு பணம் என எண்ணி வரையறுத்துத்தான் கொடுப்பார்கள் பெரிய இடமாக வாடகைக்குப் பிடிப்பதென்பது இயலாது போயிற்று. மூன்று ரூபாய் வாடகை கொடுத்தோம். எப்படியோ புதுக்குடித்தனமும் புதுப்படிப்பும் ந - ந் து கொண்டே வந்தது. எங்கள் ஊரிலிருந்து அடிக்கடி யாரா வது வந்து கொண்டே இருப்பார்கள். அவர்கள் வழி அம்மா தின்பண்டங்களையும் பிற தேவையான பொருள்களை யும் கொடுத்து அனுப்புவார்கள். நாட்கள் இவ்வாறு கழிந்தன. ஒரு நாள் இரவு நான் உணவு கொண்டுவிட்டுத் திண் ணையில் என்நண்பர்களுடன் உட்கார்ந்து பேசிக்கொண்டே