பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயங்கர இரவு 121 பின் ஒன்ருக வந்தன. என் தந்தையார் இறந்த நினைவு வந்தது. வீட்டில் தாயார் தனியாக இருப்பார்களே என்ற எண்ணமும் பிறந்தது. அவர்களைப்பற்றிக் கண்ட கனவே என்னை அப்படி நடுங்க வைத்தது. என் தாயார் அடிக்கடி வீட்டில் சொல்வதுண்டு. ஏதாவது வீட்டிலோ, ஊரிலோ, கெடுதல் நேருமாயின் அதை அவர்கள் முன் கூட்டியே. கனவிேைலா, பிற வழியாகவோ அறிவார்களாம். நானும் அன்று கண்ட் கனவை அப்படி ஏதாவது நிகழுதற்கு முன் எச்சரிக்கையோ என எண்ணிப் பயந்தேன். - நாங்கள் செங்கற்பட்டுக்கு வந்துவிட்ட பிறகு வீட்டில் தனியாக என் அன்னையார் இருந்தார்களல்லவா! அவர்கள் நோய்வாய்ப்பட்டது போலவும் அருகில் இருந்து ஒருவரும் ஆறுதல் சொல்லவில்லை என்ற காரணத்தால் அவர்கள் வருந்தினது போலவும், அந்தத் துயரத் திடையில் நோயும் வருத்த அவர்கள் வாடி வாடி உயிர்விட்டது போலவும் கண்ட கனவிேைலதான் அப்படி அஞ்சி அலறிக் கூச்சலிட் டேன். என்ருலும் இக்கனவைப் பாட்டியிடம் நான் சொல்ல வில்லை. சொல்ல நா எழவில்லை. பெற்றெடுத்துப் பாலூட்டிச் சீராட்டி வளர்த்த அன்னையின் மறைவை யார்தான் சகிக்க முடியும்? கனவிலே நடந்த நிகழ்ச்சியாயினும் அது நனவிலே நடக்கக்கூடாதே என்ற கவலைதான் எனக்கு அதிகமாகியது. அந்த நிலையில் நான் உறங்குவது எங்கே? இரண்டு நாட்களுக்கு முன்தான் எங்கள் ஊரிலிருந்து ஒருவர் வந்திருந்தார். அவர் மூலம் அம்மா முறுக்கும் நெய்யும் கொடுத்தனுப்பி இருந்தார்கள். நன்ருக இருந் தார்கள் என்றும் யாதொரு நோயும் அவர்களுக்கு இல்லை என்றும் அவர் சொன்னர். அப்படி இருக்க நான் கனவில் கண்டபடி இரண்டு நாளில் தாயார் எப்படி நோயுற்று