பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 இளமையின் நினைவுகள் இறப்பார்கள் என்று எண்ணிச் சிந்தை தளர்ந்தேன். தாயின் பிரிவு நினைக்கமுடியாத ஒன்ருக நெஞ்சை வருத் தியது. பெற்ற மகன் எங்கேயோ இருக்க, தனி வீட்டில் கேட்பார் இல்லாத அனுதையாகவா என் அன்னை இறந் திருப்பார்கள் என்று கேட்டது என் நெஞ்சம். ஐந்தாறு திங்களுக்கு முன்தான் தந்தையை இழந்த நான் - தந்தை யாய்த் தாயாய் எல்லாமாய் இருந்த என் அன்னையை இழப்பதென்ருல் - என்னுல் நம்பவே முடியவில்லை. இந்த எண்ணங்களுக்கு இடையில் நான்மறுபடியும் உறங்கவில்லை. பொழுது புலர்ந்துகொண்டே இருந்தது. மனம் மட்டும் ஏதோ அச்சத்தால் அலறிக் கொண்டிருந்தது. ஒருபுறம் அன்னைக்கு யாதொரு தீங்கும் இருக்காது என்ற உணர்வும் அறிவுறுத்திக்கொண்டே இருந்தது. என்ருலும் ஏதோ ஒரு பெருந் தீங்கு நடைபெற்றிருக்க வேண்டும் என்று அந்தப் பயங்கர இரவும், அதில் கண்ட கனவும் எனக்குச் சொல்லிக்கொண்டே இருந்தன. நான் அந்த நாள் முழுதும் ஊரிலிருந்து செய்திகளைக் கொண்டு ஆள் வருவானே என்று பார்த்துக்கொண்டே இருந்தேன். அப்படி ஒன்றும் அன்னையைப் பற்றிய அவலச் செய்தியை யாரும் கொண்டு வரவில்லை, என்ருலும் நான் கனவு கண்ட அதே வேளையில் எங்கள் ஊரில் ஒரு பயங்கரச் சண்டை நடை பெற்றுப் பல கொலைகள் நடந்தன என்ற செய்திய்ை யாரோ வந்து பாட்டியினிடம் சொல்லிக்கொண்டிருந்தான். என்ன? எப்படி? என்பன திட்டமாகத் தெரியவில்லை. என்ருலும் பயங்கர இரவின் கனவினது பயன் வேறுவகையில் பலித்து விட்டதே என எண்ணினேன். இரண்டொரு நாட்க ளுக்குள் ஊர் நிகழ்ச்சி முழுதும் வந்துவிட்டது. -z/NS