பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 இளமையின் நினைவுகள் செய்வர். அந்த நாளிலோ அத்தகைய ஏற்பாடுகள் கிடையா. ஊரில் உள்ளவர்கள் தங்களுக்குள்ளாகவே ஒருவரை அதற்குத் தர்மகர்த்தராகும் பதவிக்குத் தேர்ந்து வைத்து, அவர்கள்வழி கோயி லை ஆள வேண்டும். அதல்ைதான் அத்துணைப் போட்டியும் போரும் உண்டாயின என்னலாம். என்ருலும் ஒரே இனத்தவராகக் கூறிக் கொண்டு, இப்படிக் கொலை அளவு செல்லும் கோயில் விவகாரத்தை பெருக்கச் செய்து வாழும் நெறி அநாகரிக நெறிதானே. எப்படியோ எங்கள் ஊரில் இந்தப் போட்டியும் வலுவடைந்துவிட்டது. தெருவில் அடிக்கடி சண்டை நடப்பதும் உண்டு. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள். எங்கள் ஊரில் அந்தப் பழ மொழி மெய்யாகாவிட்டாலும், சேரி வாழும் மக்களுக்கு அது திண்டாட்டமாகவே இருந்தது என்னலாம். வேளாளர் தம்முள் மாறுபட்டால் மாற்ருனை ஏசவும், பேசவும்-ஏன்?அடிக்கவும் கூட அந்தச் சேரி வாழ்வோரை அழைக்கும் வழக் கத்தில் அவர்கள் ஒருபடி உயர்ந்தவரானுர்கள் என்னலாம். அவர்களை-பாவம்-முன்னிறுத்தி வேளாண் குடிமக்கள் தத்தம் கட்சிக் காரியத்தைச் சாதித்துக் கொண்டார்கள். இன்றும் அன்றைய அந்தச் செயலே அவ் வேளாளர் வாழ்வை ஊரில் பாழாக்கிவிட்டது என்னலாம். சிறு சிறு சண்டைகளாக வளர்ந்த ஊர்ச் சண்டைகோயில் வம்பு-கொதித்துக் கொதித்துப் பெரும் போராக மாறிவிட்டது. சிந்தாக எழுதித் தெருவில் அரையணுவிற்குப் பாட்டுப்பாடி விற்கும் அளவிற்கு ஊரில் போர் மூண்டு விட்டது என்னலாம். நான் ஊரில் என் இளமை தொட்டே வாழவில்லை, வாலாஜாபாத்தில் படித்தபோது, பெரும்பாலும்