பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோயில் சண்டை 125 அங்கேயே தங்கினேன். பிறகு உயர்நிலைப் பள்ளியில் பயிலு வதற்காக நான் செங்கற்பட்டு சென்றுவிட்டேன். ஊரில் இருந்திருப்பேனல்ை எத்தனையோ கொடுமைகளை நான் கண்டிருக்கக்கூடும். அந்த நிலை எனக்கு உண்டாகவில்லை என்ருலும் அவ்வப்போது ஊ ரி ல் நடைபெறும் கொடுமைகளை நான் கேட்டுக்கொண்டே இருந்தேன். முன் பகுதியில் நான் கண்ட பயங்கரக் கனவின் பலன் மறுநாள் எனக்குக் கிட்டிற்று. அதுவே ஊரில் நடந்த இந்தக் கொலை. நான் எந்நேரத்தில் அக்கனவினைக்கண்டு கண்விழித்தேனே அதே வேளையில்தான் அங்கு என் சொந்த ஊரில் ஒன்று, இரண்டு, மூன்று என்று துப்பாக்கிக் குண்டுகள் மக்கள் உயிரைப் பருகிக் கொண்டிருந்தன. இருவேறு கட்சிகளுக்கு இடையில் இருந்த கோயிற் பகைமை ஊர்ப்பகையாக மாறிற்று. சிறிய கட்சி, பெரியகட்சி என்று இரு கட்சிகள் உருவாயின. சிறிய கட்சி முதலியார்கள் தாம் அளவில் சிறியவராக இருந்தமையின் உடன் துணைக் குச் சேரியாரை அழைத்துக் கொண்டார்கள். கட்சிக்காரர்கள் தனிமையில் வெளியூர் செல்லும்போது மற்றவர் அவரை நையப்புடைப்பர். பதிலுக்குப் பயன் கிடைக்கும். இந்தப் போராட்டத்தில் சேரியில் வாழ்ந்த பெருவாரியான மக்கள் சிறிய கட்சியின் துணையாட்களானர்கள். ஆலுைம் ஊரில் பெரும்பாலான நிலம் பெரிய கட்சியாருக்கே உரிமையாக இருந்தது. ஆகவே அவர்கள் யாரும் நில சம்பந்தமான வேலைகளைச் செய்யச் சேரியாரை வைத்துக்கொள்ளவில்லை. நிலத்தில் உழவும் அவர்களை விடவில்லை. தாங்களே முன் னின்று ஏர் ஒட்டவும் துணிந்துவிட்டனர். இந்த நிலை சேரி வாழ்மக்கள் உள்ளங்களில் புது உணர்ச்சியை அளித்தது. இன்று நாட்டில் நாம் காணும் கிசான்' போராட்டங்கள் அன்று கிடையா! உழுபவனும் நிலக்காரனும் பண்பின் வயப்