பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

இளமையின் நினைவுகள்


வோம். அப்போது எங்கள் உறவினர் சிலராவது எங்களை வட்டமிட்டுக்கொண்டு வருவார்கள். அனைவரும் உள்ளவற்றைச் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கும் கொஞ்சம் கொடுத்தனுப்புவோம். இப்படி அந்தக்காலத்தில் எங்கே போனாலும் தாத்தாவை விட்டுப்பிரியாது செல்வது வழக்கம்.

தாத்தா எப்போதும் ‘சும்மா’ இருக்கமாட்டார்கள். ஏதாவது கதை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அப்போது எனக்கு ஐந்துவயதுகூட நிரம்பவில்லையாதலால் அவர்கள் சொன்ன கதைகளெல்லால் இன்று நினைவுக்கு வரவில்லை. என்றாலும் கிளிக்கதை ஒன்றுமட்டும் இன்னும் நினைவில் இருக்கிறது. அதைப் பின்னாலும் வேறு கதைப் புத்தகங்களில் படித்தும் இருக்கிறேன். ஆதலால் அப்படியே மனதில் பதிந்துவிட்டது என்னலாம். மேலும் அவர் இந்தக் கதையை அன்றாடம் மாலை ஆறுமணிக்கு மேல் விசிப் பலகையில் படுத்துக்கொண்டு நான் பக்கத்தில் உட்கார்ந்திருக்கச் சொல்லிக்கொண்டே இருப்பார்.

தாத்தா புராண இதிகாசங்களெல்லாம் படித்தவர். தெய்வபக்தி உள்ளவர். ஆகவே தெய்வபக்தி உள்ள கதைகளெல்லாம் கூடச்சொல்லி இருப்பார். ஒருநாள் மாலை கதை சொல்லிக்கொண்டே இருந்தார். அந்த வேளையில் எனது 'அம்மா' நான்கைந்து விறகுக் கட்டைகளைக் கையில் எடுத்துக்கொண்டு தெருவிலிருந்து உள்ளே வந்தார்கள். அதைக்கண்ட தாத்தா அதட்டிக் கூப்பிட்டார்கள். நான் பயந்தே போனேன். ‘எங்கிருந்து கொண்டுவந்தாய் விறகை’ என்றார்கள். ‘பெரியவீட்டுத் திண்ணையில் இருந்து’ என்று என் தாயார் பயந்து பயந்து பதில் சொன்னர்கள். என் தாத்தா கோபம் கொண்டால் யாராலும் எதிர்நிற்க முடியாது. என்னை அம்மா எவ்வளவு மிரட்டிலுைம் தாத்தாவுக்கு முன் அவர்கள் அலறுவார்கள்.