பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரம்படி 131 கிடையாது. அவரும் மறைவாக அத் துறையில் வல்லவ ராகிச் சிறந்தார். என்ருலும் எனது புது நண்பர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்லர். அவர்கள் பீடி முதலிய புகை குடிக்கும் பழக்கம் உடையவர்கள். எப்படியோ அவர்க ளுடன் நான் நட்பாளேைனன். வேடிக்கையாக என்னையும் அவர்கள் பீடி முதலியன பிடிக்கத் துண்டினர்கள். ஒருவன் ஒரு நாள் என் வாயிலேயே பீடித் துண்டைத் திணித்துப் பிடிக்குமாறு வற்புறுத்தின்ை நான் திணறினேன். அவர்கள் செயல் அப்பொழுது எனக்கு அ வ் வ ள வு கொடுமையாகப் படவில்லை. அவர்களை எனது நல்ல நண்பர்களாக நான் கருதினமையால் அவர்கள் செய்வதை நானும் செய்வதில் தவறில்லை என்றுதான் அன்று நினைத் திருப்பேன். என்ருலும் அதுபோன்ற கெட்ட வழக்கங் களில் செல்ல எனக்கு மனம் வரவில்லை. எப்படியோ அவர்களோடு சில வேளைகளில் தனியாக விளையாடிப் பொழுது போக்குவது உண்டு. அன்று இடைவேளையில் அப்படித்தான் அவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தேன். அவர்கள் வகுப்பறையிலே கூடப் பீடி பிடித்திருப்பார்கள் என நினைக்கிறேன். நானும் அவர்களுடன் இருந்தேன். த லே மை ஆசிரியருக்கு ஒவ் வொரு பையனைப் பற்றியும் நன்கு தெரியும். அவர் என்ன அவர்களுடன் சேரவேண்டாமென்பதைக் குறிப்பிட்டுள்ளார் என நினைக்கிறேன். அன்று அவர்களோடு நான் சேர்ந் திருப்பதைக் கண்டுவிட்டார். அவர்கள் செய்யும் குற்றங் களெல்லாம் அவருக்குப் புரிந்தனவே. வகுப்பறையில் கூட்ட மிட்டுக்கொண்டு இருந்தார்கள்; கூடவே புகை பிடித்திருக் கலாம். எனக்கு இப்போது நினைவு இல்லை. அவர்கள் கூச்சல் தலைமை ஆசிரியர் காதுக்கு எட்டி இருக்க வேண்டும். அவர் நாங்கள் இருக்கும் அறை வாயிற்படியில் வந்து