பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 நான் அன்று முதல் அவர்களோடு சேருவதில்லை. தூர விலகிவிடுவேன். அந்த அடி இல்லையானுல் நான் ஒரு வேளை இன்று புகை பிடிப்பவனுகவோ, வேறு கொடுமையா ளனுகவோ மாறிவிட்டிருப்பேன். ஆம்! அந்தப் பிரம்படி என்னை வாழ்வித்தது. - பல ஆண்டுகளுக்குப் பின் பல்கலைக் கழகத்தில் அந்த ஆசிரியரைக் கண்டேன். நான் அடியால் நலம் பெற்ற ஆண்டுக்கு மறு ஆண்டே அவர் செங்கற்பட்டை விட்டுச் சென்றுவிட்டார். பல ஆண்டுகள் கழித்துப் பல்கலைக் கழகத் தேர்வுச் சம்பந்தமான ஒரு கூட்டத்தின் இடையில் அவர்களைக் கண்டேன். நலமா என்ருர்கள். தாங்கள் வாழவைத்த நலம் கெடுமா என்றேன். அவர் சிரித்தார். அருகில் இருந்தவர்கள் ஒன்றும் புரியாது விழித்தார்கள். நான் அனைத்தையும் விளக்கினேன். அவர் என்னைத் தட் டிக் கொடுத்தார். நான் அதைப் பெருமையாக ஏற்றுக் கொண்டேன். இப்படி வாழ்வைத் திருந்தச் செய்த பிரம் படியைப் பற்றி இங்கு நான் காட்டாதிருக்க முடியுமா !