பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. ஒருத்தியும் மகனும் அப்போது நான் ஐந்தாவது படிவம் படித்துக் கொண்டிருந்தேன். எங்களுக்குப் பள்ளி இறுதி வகுப்புக் குள்ள தமிழ் ஆங்கிலப் பாடங்களையே வைப்பது வழக்கம். தமிழ்ப்பாடத்தொகுதியில் பலருடைய பாடல்களும், ஆங்கிலப் பாடத்தில் பலருடைய பாடங்களும் இடம் பெறும். எனது தமிழ்ப்பாட நூலில் அந்த ஆண்டு பல நல்ல தமிழ்ப் பாடல்கள் இடம் பெற்றன. ஈன்ருலுமாய் எனக்கு எந்தை யுமாய் என்று தொடங்கும் திருநாவுக்கரசருடைய திருப் பாதிரிப் புலியூர்ப்பதிகம் முதலில் தோத்திரமாக அமைந்தது. பின் பலப்பல பாடல்கள் இருந்தன. திருக்குறளும் நாலடியும் இடம் பெற்றன. பின்னர்க் கதைப்பகுதி வந்தது. அதில் ஒரு பகுதி திருருவிளையாடற் புராணத்திலிருந்து எ டு க் கப் பட்டது. மாமனுக வந்து வழக்குரைத்த படலம் என்பது அது. அதில் ஒரு மாதுலன் தனக்கு மகப்பேறு இன்மையால் தன் தமைக்கை மகனைத் தன் மகனுக ஏற்றுக்கொண்டு பொருள் அனைத்தையும் அவனுக்கே வைத்து விட்டுச் சிலநாள் கழித்து இறக்கவும், அவனுடைய தாயத்தார் அவன் இறந்த உடனே எல்லாச் செல்வங்களையும் தங்களுடையதாகக் கைப்பற்றி அப்பிள்ளையையும் அவனைப் பெற்றி தாயையும் திண்டாட வைத்ததாகக் கூறப்பெறுகின்றது. பின் அலமந்த அந்த அன்னை தன்னைக் கவனிப்பாரின்மையின் கவன்று. மதுரைக் கோயிலில் உள்ள இறைவனிடம் சென்று முறை யி ட் டு , அழுது அழுது அப்படியே உறங்கிவிட, அவன் கனவில் இறைவன் தோன்றி அருள் புரிந்ததாகக் கூறப்பெறுகின்றது அவ்விறைவன் அவளை மறுநாள் நீதிமன்றம் சென்று முறை யிடப் பணித்தான். அப்படியே அவள் செய்ய, மறுநாளே