பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருத்தியும் மகனும் 135 இறைவன் தானே மாமனுகச் சென்று வழச்குரைத்துத் தாயத் தாரைத் தலை குனிய வைத்து எல்லாச் செல்வத்தையும் தன் மருகனுக்கு உரிமையாக்கி மறைந்தான் என முடிகின்றது. இது வெறும் கதை போன்றதுதான். என்ருலும் பலருடைய வாழ்க்கை வரலாறுகள் அதில் பின்னிக் கிடக்கின்றன என்ன லாம். அதில் அத்தகைய சொக்கேசர் கோயிலில் சென்று இதைவனை மனமுருகப் பாடி நைந்து நைந்து கசிந்து நின்ற பாடல் என் உள்ளத்தைத் தொட்ட ஒன்ருகும். அதுவும் என் அன்னை அதன் உள்ளாழத்தைக் காட்டிய பிறகு என்னை உணர வைத்தது என்னலாம். அது எந்தப்பாடல் ! ஒருத்திநான் ஒருத்திக்கிந்த ஒருமகன் இவனும்தேரும் கருத்திலாச் சிறியன் வேறு களைகனும் காணேன் ஐய! அருத்திசால் அறவோர் தேரும் அருட்பெருங்கடலே i. (எங்கும் இருத்தி நீ அறியாய் கொல்லோ என்று பார்படிய (வீழ்ந்தாள், என்ற பாடலே அது. ஆம். இந்தப் பாடல் என் தாயின் கண்களை வற்ருக் குளமாக்கின. பொங்கல் விடுமுறையின்போது நான் எனது சொந்த ஊருக்குச் சென்றிருந்தேன். எனது பல பாடங்களையும் வைத்து நன்முறையாகப் படிப்பது உண்டு. அப்போது சிறு கைவிளக்கு அல்லது லாந்தர் விளக்குத்தான். அந்த நாளில் சிறிது நேரமாயினும் நான் அந்த விளக்கின் முன் உட்கார்ந்து படித்தால்தான் என்னை அன்னையார் விட்டு விடுவார்கள். இல்லாவிட்டால் அதட்டிக்கொண்டே இருப்பார்கள். ஒரு நாள் அவர்கள் வீட்டுத் தெருவழியில் வாயிற்படியில் தலை வைத்துப் படுத்துக்கொண்டே இருந் தார்கள். நாள் மு ைற யா க ப் படித்துக்கொண்டே