பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 இளமையின் நினைவுகள் அம்பலவாணரிடம் முறையிட்டுக் கொண்டுதான் இரு க் கிறேன். ஆலுைம் இப்படி அழகாகப் பாட முடியவில்லை. உன்னையும் என்னையும் சேர்த்து இப்படி அன்றைக்கே ஒரு புலவன் பாடி இருப்பான் என்று நினைக்கவில்லையே' என்று சொல்லிக் கண்ணிர் பெருக்கினர்கள். எனக்கும் அப்போது தான் அப்பாட்டு என் வாழ்வை அப்படியே எவ்வாறு படம் பிடித்துக் காட்டுகிறது என்ற உண்மை புலயிைற்று. நான் உடனே 'அம்மா' என்று அலறி அவர்களை அ ப் ப டி ேய அணைத்துக்கொண்டேன். அவர்கள் கண்ணிர் என் முதுகின் மேல் சொட்டுச் சொட்டாக வீழ்ந்தது; என்ருலும் என்னை அழவேண்டாம் என்று அவர்கள் தேற்றிக்கொண்டே இருந் தார்கள்.இறுதியாக அவர்கள் கண்களைத் துடைத்துக்கொண் டார்கள், என்னைத் தலைநிமிர்த்திக் குழந்தாய் அழாதே ! நாம் என்ன செய்யலாம். இப்படி வாழ் வி ல் தனிமையாக விடப்பட்டவர்களை ஆண்டவன் காப்பார் என்ருர்கள். ஆம்! அந்த வணிக அன்னையும் அன்றும் சொக்கநாதரிடம்தானே முறையிட்டாள். அவன் எல்லாம் அறிவான் என்பதை, அருத்திசால் அறவோர் தேரும் அருட்பெருங் கடலே எங்கும் இருத்திநீ அறியாய் கொல்லோ என்று பார்படிய வீழ்ந்தான்' என்று பரஞ்சோதியார்தான் எ வ் வள வு அழகாகக் கூறுகிருர், ஆம், என் அன்னையும் அந்த வகையிலேயே எங்களை ஆண்டவன் காப்பாற்றுவான் என்ற தளரா ந ம் பி க் ைக வைத்திருந்தார்கள். பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அவ்விறைவன் எங்களை மட்டும் பார்க்காதிருப்பான இப்படி அந்த இளம் வயதிலே திருத்துவார் இன்றியும், கேட்பார் இன்றியும், உதவுவார்