பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. விபூதிச் சாமியார் அன்று பள்ளிக்கூடத்தில் ஏதோ சிறப்புவிழா. எங்கள் பள்ளிக்கூடம் மாலை 3 மணிக்கே மூடப்பெற்றது. மறுபடியும் ஐந்து மணிக்குக் கூட்டம் என்றும் அதற்கு நாங் கள் தி ரு ம் பி வரவேண்டு மென்றும் தலைமை ஆசிரியர் சொல்லி இருந்தார். நாங்கள் எங்கள் வீடுகளுக்குப் புறப் பட்டுச் சென்ருேம். மாணவர் அனைவரும் மாலைக் கூட்டத் துக்கு வரவேண்டும் என்று கூறி இருந்தபோதிலும் ஒரு சிலர்தான் அக் கூட்டத்திற்கு வரப் புறப்பட்டனர். எங்கள் தெருவிலிருந்து நானும் என் நண்பர் திருவேங்கடமும் மட் டுமே வீட்டிலிருந்து கூட்டத்திற்குப் புறப்பட்டோம், ஆல்ை நாங்கள் பள்ளிக்கூடம் சென்று சேரவில்லை. கூட்டத்திலும் பங்கு கொள்ளவில்லை. வீட்டை விட்டு வெகுதூரம் வந்து விட்டோம். பள்ளிக்கு இன்னும் ஒரு பர்லாங்கு தூரம்தான் இருக்கும். ஒரு திருப்பம், நாங்கள் குறுக்காகப் புகுந்து அத்திருப் பத்தைக் கடந்து செல்லவேண்டும். அவ்வாறு சென்று கொண்டிருந்தபோது எங்கள் எதிரில் ஒரு சாமியார் எதிர்ப் பட்டார். அவர் பிள்ளைகளா நில்லுங்கள் ' என்ருர். எங் கள் முகத்தில் அப்போதுதான் வீட்டில் இட்ட தி ரு நீ று விளங்கிக் கொண்டிருந்தது. அவர் முகத்திலும் உடம்பி லும் நிறையப் பூச்சுக்கள் இருந்தன;இடையில் காவி அணிந் திருந்தார். தோளில் ஒரு பையும் கையில் சிறு தடியும் இருந் தன என நினைக்கின்றேன். எங்களை அவர் என்னவென்று நினைத்தாரோ! சிறுபிள்ளைகள் தாமே என எண்ணி இருப் பார். ஆம், எண்ணித்தான் அழைத்தார் போலும், நாங்கள்