பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விபூதிச் சாமியார் 143 காலத்துக்குப் பின்-நல்லறிவு பெற்றபின், அந்தக் கதைகள் அத்தனையும் அப்படியே கொள்ளத்தக்கன அல்ல என்னும் உண்மையை உணர்ந்தேன் என்ருலும் அந்த இளம்வயதில் அந்த உணர்ச்சி இல்லை. எதோ அடியார்கள் உண்மையில் அருள் பெற்றவர்தாம் என நினைத்தேன். அதேைலயே வருந்தும் நிலையில் இருந்த என்னைக் காப்பாற்ற ஆண்ட வனே அவரை அனுப்பினர் என்று அவர் தம்மைப் பற்றிக் கூறியதை உண்மையெனக் கருதினேன். என் நண்பனும் அப்படியே கருதினன். ஆயினும் நாங்கள் பேச இயலாது வாயடைத்து நின்ருேம். இதற்கிடையில் அந்தச் சாமியாரே பேசத் தொடங்கி ர்ை. நான் ஒன்றும் செய்யமாட்டேன். ஆண்டவன் கட்டளை யிட்டபடியே நான் உங்களுக்குத் திருநீறும், குங்குமமும் கொடுத்துவிட்டேன். நான் வெகு தொலைவில் இருந்து இதற்காக வந்தேன். வறிதே இப்போது எப்படி அவ்வளவு தூரம் போவது என நினைக்கிறேன்' என்ருர் அவர். நான் அவரை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு சென்று சோறு அளிக்கலாமா என நினைத்தேன். இப்படி ஆண்டவனல் அனுப்பப்பட்டவராயின் அவருக்கு எதுதான் சித்திக்காது' என்று நினைக்கத் தெரியவில்லை எனக்கு. பாவம்! அவர் பசி யோடு வந்திருப்பதால் ஏதாவது கொடுக்கவேண்டும் என்று நினைத்தேன். பையில் கையை விட்டேன். ஒரு நான்களு இருந்தது. எனது பாட்டியார் அதிகமாக என்னிடம் பணம் தரமாட்டார்கள். அவர்களுக்குக் குடும்பச் செலவுகளுக்காக அம்மா திட்டமாகவே திங்கள் தோறும் கொடுத்தனுப்பி வந்தார்கள். எனவே ஒரு காலணு கூட நாங்கள் அதிகமாகச் செலவு செய்யமுடியாது. அந்த நாலணுக்கூட ஏதோ கூட்டத் திற்குச் செல்லுவதால் பாட்டி கொடுத்தார்கள். பள்ளிக் கூடம் வகுப்புக்குப் போவதாயிருப்பின் நாங்கள் ஒன்றும் கொண்டு செல்வதில்லை. எனது நண்பனும் எட்டணு வைத்