பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விபூதிச் சாமியார் 145 அத்தனையும் சொல்லி முக்கால் ரூபாய் கொடுத்ததையும் மேலும் ஒரு ரூபாய் கொடுக்க முன் வந்ததையும் கூறினுேம். அவரும் அவருடன் இருந்தவர்களும் சிரித்தார்கள். சரி 'உங்கள் ஒரு ரூபாய் நல்ல ரூபாய்’ என்ருர்கள். மேலும் அந்தச் சாமியார் கள்ளச்சாமியார் என்றும், விரல் நக இடுக்கில் விபூதி, குங்குமத்தை வைத்திருந்து, எங்கிருந்தோ வரவழைப்பது போலக் காட்டி ஏமாற்றிப் பெண்களையும், குழந்தைகளையும் மிரட்டிப் பொருள் பெறுகிறவர் என்றும் கூறினர்கள். அவர்கள் வரும் போது அந்தச் சாமியார் அங்கிருந்து நழுவி விட்டார் என்றும், அவர் பக்கத்தில் உள்ள ஒரு கள்ளுக் கடைக் குச் சென்றிருக்கலாமென்றும் கூறினர்கள். நான் உடனே அவர்களுடன் கள் ளு க் கடைக்குச் சென்றேன். அந்தச் சாமியாரைத் தேடினுேம். கிடைக்கவில்லை. என்ருலும் சிறிது நேரத்துக்கு முன்தான் சாமியார் தோற்றத்தில் வந்து எட்டணுக் கள்ளும் நாலணுக் கறியும் உண்டு ஒருவர் சென்ருர் என்பதை அறிந்தோம். எங்களை அழைத்து வந்த அக்கடைக்காரர் தான் சொல்லி யதை எங்களுக்கு விளக்கி, அந்த ஆசாமிதான் எங்களை ஏமாற்றியது எனக்காட்டி இனி அந்த வகையில் ஏமாருது மிக எச்சரிக்கையாக வாழ வேண்டுமென்றும் கா ட் டி வீட்டுக்கு அனுப்பினர். நாங்கள் பிறகு கூட்டத்துக்குப் போவது எங்கே? மணி ஏழாகியிருந்தது. நானும் என் நண்பரும் பேசிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தோம். இப்படி நாங்கள் ஏமாற்றப் பட்டதை இன்று நினைத்தாலும் அவமானமாக உள்ளது. ஆயினும் இன்றைக்கும் இது போன்று ஏமாற்றும் பாதகர்களும் ஏமாறும் நிலையிலுள்ள அப்பாவிகளும் இருப்பதைப் பத்திரிகைகள் வாயிலாகப் பயிலும்போது என்று இந்தக் கொடுமை நீங்கும் என எண்ணி உளம் நைகிறது. ஏமாற்றும் கொடுமை ஒழிந்து என்று நாடு திருந்துமோ ?