பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முக்குத்தி 149 இருப்பார்கள். அதுவும் தூர்ந்து அடுத்தடுத்து வந்த வெள் ளங்கள் கழித்துப் புதுப் புது வாய்க்கால்கள் தோ ன் றி இருக்கும். இந்த நிலையில் அன்று தொலைந்த மூக்குத்தி எப்படிக் கிடைக்கும்? புதிதாக வெள்ளம்வந்து வற்றியபின் கால்வாய் தோண் டிர்ைகள். கீழ் மண் எல்லாம் மேலாகப் புரள, இடையில் சிறு ஊற்று ஒடிக்கொண்டிருந்தது. அந்த மூக்குத்தி கொண்டு வந்தவரும் இன்னும் அவருடன் பொழுதுபோக்குக்காகச் சுற்றிக் கொண்டிருந்த இரண்டொருவரும் முன்னுள் மாலை அந்த ஊற்றுக் கரையில் உட்கார்ந்து பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தார்களாம். பேச்சோடு கையும் சும்மா இராமல் மண்ணைக் கிளறிக்கொண்டிருந்ததாம். ஒருதரம் மண்ணைத் தள்ளும்போது மண்ணுடன் இந்த மூக்குத்தியும் புரண்டு வந்ததாம். மண்ணுெடு மண்ணுக நிறம் குன்றி ஏதோ சிறு மண்கட்டி என இருந்ததை அவர்கள் எடுத்துத் துடைத்துப் பார்க்க அது மூக்குத்தியாய்த் தெரிந்ததாம். உடனே அது யாருடையது என்ற கேள்வி எழுந்திருக்கும். அந்தப் பொழுதுபோக்கும் பெரியவருக்கு ஊர்க் கதை எல்லாம் தெரியுமாதலால், யோசித்து அது என் அன்னையுடையதாகத் தான் இருக்கவேண்டும் என்று முடிவு செய்தாராம். மறு நாள் அதை எடுத்துக்கொண்டு வந்து என் அன்னைகையில் கொடுத்துத்தான் கைக்கூலியாக மண்டகப்படியின் பெய ரால் ஒரு ரூபாய் வாங்கிச் சென்ருர். அன்னையார் இந்தக் கதையைச் சொல்லி ஒரு பெரு மூச்சு எறிந்தார். ஆம் ! நம்முடைய சொத்தானுல்-நாம் மெய்வருந்திப் பாடுபட்ட பொருளானுல் எத்தனை ஆண்டு கள் கழித்தாலும் அது நம்மைவிட்டுப் பிரிந்தே போய்விட் டாலும் எப்படியும் திரும்ப நம்மிடமே வந்துசேரும் என்று நான் அடிக்கடி சொல்லுவது எவ்வளவு மெய் என்று உனக்