பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 இளமையின் நினைவுகள் குத் தெரிகிறதா ? என்று கேட்டார்கள். நானு ம் ஆம் என்று தலையாட்டினேன். எத்தனையோ வெள்ளங்கள், மண் மேடுகள், பள்ளங்கள்-இடையிலே கழிந்த எத்தனையோ நாட்கள்.இவற்றையெல்லாம் கடந்து, அந்தச் சிறுபொருள். மூக்குத்தி கிடைத்ததை என்னவென்று சொல்வது. அது மண்ணுேடு மண்ணுக மறைந்து போயிருக்கலாம், அன்றி வேறு தனியாக யாரிடமாவது அகப்பட்டு விற்கப்பெற்றிருக் கலாம், இத்தனை நாள் கழித்தும் ஒரு தனி மனிதனிடம் அகப்பட்டிருந்தால் ஒருவேளை வெளிவராது போனுலும் போயிருக்கும், ஆல்ை நான்கைந்து பேருக்கிடையில் அது கண்டுபிடிக்கப் பெற்றமையின் வீடுவந்து சேர்ந்தது. அதன் விலை ஒன்றும் அதிகம் இல்லைதான். அதிகமாக இருந்தால் பதினைந்து, இருபது ரூபாய் இருக்கும், எனி னும் அது உரியவரிடம் இத்தனை ஆண்டுகள் கழித்து வந்து சேர்ந்தது என்ருல் . அதுவும் வெள்ளங்களுக்கும் பள்ளங் களுக்கும் ஈடுகொடுத்து வெளிப்பட்டு உரியவரிடம் வந்தது என்ருல் அதை எண்ணி வியவாதிருக்க முடியமா! இந்த நிலையில் எனக்கு மற்ருென்றும் நினைவு வரு கிறது. ஒருகால் எனது அன்னையார் எங்கள் ஊரில் ஒர் இழவு விசாரிக்கச் சென்று வந்தார்கள். மாலையில் விசா ரித்துவிட்டு அப்படியே ஆற்றில் செல்லும் ஒடையில் மூழ்கி விட்டு வந்தார்கள். எல்லோருமே அப்படித்தான் செய்வது வழக்கம். துக்கம் விசாரிக்கச் செல்லுபவர்கள் அப்படியே விட்டிற்குள் புகக்கூடாது என்பது பழக்கம். மேலும் வீட்டின் கிணற்றடியில் வந்து மூழ்குவதிலும், பரக்க ஒடும் பாலாற்று ஊற்று நீரில் மூழ்குவது சிறப்பல்லவா? என் அன்னையும் அப்படியே அன்று மாலை ஊற்று நீரில் மூழ்கி வீட்டிற்கு வந்தார்கள். அவர்கள் கழுத்தில் ஒரு செம்பவளமாலை ஒன்றுதான் இருந்தது. அதன் நுனியில் பொன் இழைத்த