பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. சோடா புட்டி வருத்தப்பட்டுச் சம்பாதிக்கிற நம் பொருள் என்றைக் காயினும் எங்கே சென்ருலும் நம் கைக்கு வந்துசேரும் என்று அம்மா அடிக்கடி சொல்வது மேற் கண்டபடி இரு சமயங் களில் மெய்யானதை அறிந்தேன். அப்படியே நமக்கு உரிமை அல்லாததை, விரும்பி ஒருவர் கொண்டு வந்து கொடுப்ப தாயினும் சொந்தமல்லாததை எ டு த் து க் கொள்ளுதல் நமக்குத் தீமையாகத்தான் முடியும் என்பதையும் க ண் டு கொண்டேன். ஏதோ ஒரு சிறு வேலை செய்வதற்காகநமக்கு உரிமையல்லாத வேலையைச் செய்வதற்காக-பிறர் உபகாரமாக ஏதாவது கொடுத்தாலும் அதை நாம் ஏற்றுக் கொள்ளலாகாது என அம்மா அடிக்கடி சொல்லுவார்கள். அதுவும் மெய்யானதை அன்ருெரு நாள் கண்டேன். எங்கள் ஊரில் நிலத்தை விற்பவரும் வாங்குபவரும் பலர். அடிக்கடி விற்பனைப் பத்திரம் வாங்கி எழுதவேண்டிய வேலை ஊரில் அன்று கணக்கர் கையில் இருந்தது. ஊரில் சிலர் படித்தவர்கள் இருந்தாலும் அந்த வேலையைச் செய்ய யாரும் செல்வதில்லை. ஒரு வேளை அதனுல் கணக்கப்பிள்ளை யின் விரோதத்தைச் சம்பாதித்துக்கொள்ள வேண்டுமே என்ற காரணத்தினலோ, நமக்கு ஏன் இந்த வேலை எல்லாம்' என்ற சோம்பல் எண்ணத்தினலோ அன்றி ஏனே யாரும் அந்த எழுத்து வேலைக்கு வருவதில்லை. கணக்கப்பிள்ளையும் அவற்றையெல்லாம் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, ஒரு பத்திரத்துக்கு இவ்வளவு ரூபாய் என்று முன் பேசிக் கொண்டே எழுதுவார். சில சமயம் பத்திர ஸ்டாம்பு’க்குக் கொடுக்க வேண்டிய கணக்கைவிட அதிகமாகப் பணம்