பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோடா புட்டி 155 என்று கேட்டார்கள். சரி, அப்படியாயின் எ ழு தி த் தருகிறேன் என்றேன். - அவர் குறிப்புக்களைக் கொடுத்தார். நானும் விற்பனை வாங்கவேண்டிய வகையில் பத்திரத்தின் நகல் எழுதிக் காண்பித்தேன், அவரும் மற்றவர்களும் பார்த்துப் பார்த்து மிகவும் நன்ருகவும் ஒழுங்காகவும் அமைந்திருக்கிறது என்ருர்கள். உடனே என்னையே பத்திரத் தாளில் எழுதச் சொன்னர்கள். நான் இளையவனுய் இருப்பதால் எழுத லாகாது என்பதை விளக்கிச் சொல்லப் பெரும் தொல்லை யாகப் போய்விட்டது. கடைசியில் ஒருவாறு சரி என்ருர்கள். வேருெருவர் எழுதினுல் குறைந்தது ஐந்து ரூபாயாவது தரவேண்டுமே என்பது அவர் கவலை. நான் அதைக் கண்டேன? நன்ருகக் கையெழுத்து எழுதும் ஒரு பெரியவரை வைத்துக் கொண்டு நான் சொல்லிக்கொண்டே வந்தேன். அவர் எழுதி முடித்தார். பிறகு அவர்கள் அந்தப் பத்திரத்தை வாலாஜாபாத்திற்கு எடுத்துக்கொண்டு சென்ருர்கள். பத்திரம் ஒழுங்காக எழுதப் பெற்றிருந் தமையால் யாதொரு தவறும் தடங்கலும் இல்லாமல் ஆவணக்களரியில் பதிவு செய்யப் பெற்றது. அன்று மாலை அந்தப்பக்கத்து வீட்டுக்காரர் கையில் ஒரு டஜன் சோடாப் புட்டிப் பெட்டியுடன் வந்தார். பத்திரம் எழுதி எடுத்துக் கொண்டு உடன் சென்றவரை அவருடன் நான் காணவில்லை. அவர் எங்கே? என்றேன். அதைத்தானே சொல்ல வந்தேன்' என்று அவரே சொல்ல விரும்பியவர் போலப் பேச ஆரம்பித்தார். நீ சொல்லி யதை அப்படியே எழுதி வந்தான்; கூடவே சாட்சிக்காக அங்கும் வந்தான்; என்னமோ பலகாரம் சாப்பிட்டு வரட்டும் என்று எட்டணு கொடுத்தேன். அவன் கு ைற ந் த து இரண்டு ரூபாய் வேண்டும் என்ருன். நான் போடாபோ'