பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 இளமையின் நினைவுகள் தரமுடியாது என்று சொல்லி விட்டேன். அவன் ஏதேதோ பேசின்ை. நான் கிடக்கிறது கழுதை என்று வைது விட்டு எட்டணுவை வீசி எறிந்துவிட்டு வந்து விட்டேன். இனி அவன் முகதரிசனம் கூடச் செய்ய மாட்டேன். ஏதோ பெரிய மலையைப் புரட்டியது போல் வாலாட்டுகிறது நாய்' என்று பேசி முடித்தார். எனக்கு உள் ள த் தி ல் கோபம் பொங்கியது. இவருக்கு உதவியதற்காக அவர் பாவம் நாயாகவும், கழுதையாகவும் ஆக வேண்டுமா? கணக்குப் பிள்ளை எழுதினுல் அவருக்குப் பத்துப் பதினைந்து தர வேண்டும் என்பதற்காகவே என்னிடம் வந்து என் அம்மா விடம் இல்லாததை எல்லாம் சொல்லி எழுத வைத்தார். நான் ஒன்றும் கேட்கவில்லை. ஆகவே அவருக்கு அந்தப் பத்து ரூபாயும் லாபம்தானே. அதில் அதை எழுதினவருக்கு இரண்டு ரூபாய் கொடுத்தால் என்ன என்று என்னையே கேட்டுக் கொண்டேன். அவரைக் கேட்டால் அவர் இல்லா தையும் பொல்லாததையும் சேர்த்து அம்மாவிடம் கோள் மூட்டுவார். எனவே நானே நினைத்துக் கொண்டேன். நாங்கள் பேசிக் கொண்டே இருக்கும்போது உள் வேலை களை முடித்துக் கொண்டு அம்மா வெளி வந்தார்கள். "என்ன எல்லாம் முடிந்ததா?’ என்ருர்கள். அவர் ஆம்' என்று கூறி அரை ரூபாய் கொடுத்து மற்றவரை விரட்டிய தன் பெருமையை மறுபடியும் அம்மாவிடம் சொன்னர். சொல்லிப் புறப்பட எழுந்தவர் அந்தச் சோடா புட்டிகளை அம்மா பக்கம் நகர்த்தி உங்களுக்காக வாங்கி வந்தேன். நாளை காலியானதும் நானே எடுத்துக் கொண்டு சென்று கொடுத்து விடுகிறேன் என்ருர். அம்மாவுக்குக் கோபம் வந்தது. யார் உங்களை இதை வாங்கி வரச் சொன்னது. கைக்கூலியா இது? வேண்டாம் எடுத்துக் கொண்டு போங்கள்' என்று கோபத்தோடு சொன்னர். அவர் மெள்ள நழுவி விட்டார் என்றே சொல்ல வேண்டும்.