பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோடா புட்டி 157 } அம்மாவிற்குச் சற்றுத் தளர்ச்சி இருந்தால் அவர்கள் அடிக்கடி பழம், சோடா முதலியவற்றை வாங்கி வைத்துக் கொண்டு உண்டு வருவார்கள். ஆகவே அதைச் சாதகமாகப் பயன் படுத்திக்கொண்டார் அவர். அன்றைக்கு வாலாஜா பாத்தில் சோடா இரண்டு பை, கலர் நான்கு பை என்று மிகக் குறைந்த விலையில் விற்றது. ஆகவே அவர் வாங்கி வந்த அனைத்தும் சேர்த்தாலும் மூன்று அணுக்கள்தாம். அவர் கணக்கப்பிள்ளை எழுதாததால் வந்த பத்து ரூபா லாபத்தில் எனக்கு மூன்றணு செலவிட்டால் என எண்ணி இருப்பார். ஆனல் அந்த சாட்சிக்காக வந்தவனுக்கு ஒரு ரூபாய்கூடக் கொடுக்க அவர் விரும்பவில்லை. அம்மா அந்தச் சோடா புட்டிகளை அப்படியே எடுத்து வைத்தார்கள். என்ருலும் ஒன்றிரண்டை உடைத்து யாரோ வந்தவருக்குக் கொடுக்கச் சொன்னர்கள். ஆயினும் அம்மா மனதில் நிம்மதி இல்லை. 'இதோ இந்த மூன்றணு சோடாவுக்குப்பதில் நமக்கு இரண்டு மடங்காக ஏதாவது நட்டம் வரும் பார் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள். நம் வேலை பத்திரம் எழுதுவது அல்ல. அந்த வேலையே செய்து பிழைக்கும் கணக்கப் பிள்ளையோ மற்றவரோ வேண்டுமானல் கைக்கூலி பெற லாம். நாம் ஏதோ உதவிளுேம். அதற்கு இதுவா? என்று கூறிக்கொண்டே இருந்தார்கள். மாலை வந்தது. விளக்கேற்றும் நேரம் ஆயிற்று. கை விளக்கேற்றி வைத்துவிட்டார்கள். நன்கு இருட்டியபின்பு லாந்தர் விளக்கு ஏற்றவேண்டும். பகலில் விளக்கை நன்கு துடைத்து உலர்த்தி வைத்திருந்தார்கள். விளக்கு ஏற்றப் பட்டது. நன்கு எரிந்துகொண்டிருந்த வேளையில் வீட்டுக்கு வந்த ஒருவர் கை, கால் கழுவிக்கொண்டு வந்து கையை வீசினர். ஒரு துளி லாந்தர் கண்ணுடி மேல் பட்டது. அவ் வளவுதான் படீர்', என்று கண்ணுடி உடைந்தது. உடனே