பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 இளமையின் நினைவுகள் அரசியல் காரியங்கள் பேசுவதும் உண்டு. உரிமை க் கொந்தளிப்புக்கு இடையிலும் நாங்கள் ஒருசிலர் பங்கு கொள்ள நினைத்தோம். அரசியல் கைதிகளைச் சிறை செய்து நீதிமன்றங்களுக்குக் கொண் டு வரும்போதெல்லாம் நாங்கள் சென்று காண்பதுண்டு. அதனுல் எங்கள் ஆசிரியர்கள் - சிறப்பாகக் கணக்கு ஆசிரியர் - அதிகமாகக் கோபிப்பார். இன்று அவர் இல்லை. அன்று உண்மையில் எங்களில் ஒருசிலரின் கல்வி வளர அக்கரை காட்டியவர். ஆகவே நாங்கள் பல சூழல்களுக்கு உட்பட்டுக் கெட லாகாது என்பது அவர் ஆசை. சில சமயம் அவர் என்னை அடித்துக்கூட இருக்கிருர் எப்படி இருந்தும் நாங்கள் அந்த இயக்கத்தில் தீவிரப் பங்கு கொள்ளாவிட்டாலும் ஒய்வு நேரங்களிலெல்லாம் அத் துறையில் பங்கு கொண்டே உழைத்தோம். அவற்றுள் ஒன்றே ஊழியர் சங் கம் என்பது. - நாட்டு மக்கள் நல் உ ண ர் வு பெற்று எ ழு ந் து விடுதலைக்குப் பணிபரியும் அந் நாளில் நாங்களும் ஏதாவது செய்ய வேண்டுமென விரும்பினுேம். அந்த நாளில் எங்கள் ஊரிலிருந்து-எங்கள் உயர்நிலைப் பள்ளியில் முன் படித் திருந்து அப்போது-சென்னை சென்று பயின்ற சில உணர்ச்சி மிக்க கல்லூரி மாணவர்கள் அரசியலில் தீவிரமாய்ப் பங்கு எடுத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பி த் த ன் என்ற ஒரு திங்கள் இதழையும் வெளியிட்டு வந்தனர். அவர்களுள் மு க் கி ய மா ன வ ர் இந்திய அரசாங்க முன்னைய இரெயில்வே துணை அ ைம ச் சர் ஆவார். அவர் அப் 'பித்தன்' பத்திரிகையைக் கொணர்ந்து எங்களை யெல்லாம் அதற்கு உறுப்பினராக்கிச் சென்றதோடு, எங்களையெல் லாம் அதில் கட்டுரை எழுதுமாறும் வற்புறுத்தினர். அந்தப் பத்திரிகை எழுத்துக்களும், நாட்டு நிலையும் ஒன்று சேர்ந்து ஊழியர் சங்கத்தைத் தோற்றுவித்தது என்னலாம்.