பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 - இளமையின் நினைவுகள் சென்று விட்டது. அத்தேர்தலில் நானே வெற்றி பெற் றேன் என்பதையும் குறிப்பிடுகிறேன். ஊழியர் சங்கம் நன்கு பணியாற்றிற்று. பக்கத்திலே உள்ள சேரிகளுக்கெல்லாம் சென்று அங்கு மக்கள் உயர வேண்டியவகை பற்றியும், தூய்மையாக இருக்க வேண்டிய நிலை பற்றியும் பேசிச் சீர்திருத்தம் செய்து வந்தோம். அன்று கள்ளைக் குடிக்க வேண்டாம் என்று பிரசாரம் செய்ய அரசாங்கம் அனுமதித்து இருந்தது. எனவே நாங்கள் இரண்டிரண்டு மாணவர்களாகப் பல ஊர்களுக்குச் சென்று மதுவிலக்குப் பிரசாரம் செய்தோம். விடுமுறை நாட்களில் தான் இவற்றைச் செய்தோம் என்ருலும் எங்கள் முறையான படிப்பு இவற்ருல் சிறிது த ைட ப் பட்ட து என்று சொல்லலாம். ஒரு நாள் ஒரு கூட்டத்திற்குப்போவதற்காக நான் என் கணக்கு ஆசிரியரிடம் உத்தரவு வாங்கிக் கொண்டு வந்தேன். அன்று முக்கியமான பாடம் நடை பெற்றது. பிறகு சில நாட்கள் கழித்தே அந்தப் பாடத்தை நான் புரிந்து கொள்ள முடிந்தது. இவ்வாறு சில பாடங் கள் எனக்குப் புரியா வகையில் சென்றன. எனினும் பள்ளி யிறுதி வகுப்பில் கடைசி ஆறு தினங்களில் நான் ஒன்றிலும் பங்கு கொள்ளாது அமைதியாக இருந்து இறுதியில் வெற்றி பெற்றேன். என்ருலும் அந்த இறுதி நாளிலும் இயற்கை வழி நான் துன்புறுத்தப்பட்டேன். மலேரியா' எ ன் னு ம் கொடிய நோய் சனவரி மாதத்தில் என்னைப் படுக்கையில் வைத்துவிட்டது. பல பாடங்களை விட்டுவிட்டேன். இறுதி யில் தேர்வு ஒரு மாதம் இருக்கும்போது முயன்று படித்து வெற்றியும் பெற்றுவிட்டேன். இவ்வாறு எனது உயர்நிலைப்பள்ளியில் பயிலும்போதே அரசியல் அலைகளால் ஒரளவு மோதப்பட்டும், சமூக சீர்