பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாட்டியின் அறிவுரை

19


அவர்களோடு தோட்டங்களுக்குப் போகும் போது அவர்கள் எத்தனையோ பாட்டுகளும் கதைகளும் சொல்லுவார்கள் என்று கூறினேன். அவர்கள் சொல்லிய அத்தனையும் இன்று என் நினைவில் இல்லை. ஏதோ ஒரு பாட்டில் ஒரு சில அடிகள் தாம் நினைவுக்கு வருகின்றன. அந்தப் பாட்டு வேடிக்கைப் பாட்டுத்தான். என்றாலும் அதன் அடிகள் ஒருசில எப்படியோ என் உள்ளத்தில் நிலைத்த இடம் பெற்றுவிட்டன.

பிள்ளையார் பிள்ளையார் எங்கேயோ பிள்ளையார்?
கத்தரித் தோட்டத்திலே களை பறிக்கிறாராம்
[ பிள்ளையார்
அங்கேயும் போய்ப்பார்த்தேன் அவர் எங்கேயோ
[ பிள்ளையார்?
வண்டைக்காய் தோட்டத்திலே வந்திருக்கிறார்
[ பிள்ளையார்
அங்கேயும் போய்பார்த்தேன் அவர் எங்கேயோ
[ பிள்ளையார்?

என்ற இந்தச் சில அடிகள் தாம் என் உள்ளத்தில் நின்றன. இதன் கருத்து என்ன என்று விளக்க உரை கேட்குமாறு அன்றைக்கு நான் படிக்கவில்லை. என்றாலும் பிள்ளையார் இப்படித் தோட்டங்களுக்கெல்லாம் ஏன் போகவேண்டும் என்று மாத்திரம் கேட்பேன். பாட்டி சொன்ன பதில் ஒரு சிறிது என் நினைவுக்கு வருகிறது. பிள்ளையார் கத்தரித் தோட்டத்துக்கும் வெண்டைத் தோட்டத்துக்கு ஏன் போகவேண்டும் என்பது மட்டும் எனக்கு அறியாத புதிராக இருந்தது. பாட்டி ஒருநாள் அதைப்பற்றிச் சொன்னார்கள், ‘பிள்ளையார் இங்கெல்லாம் வரமாட்டார் என்று நினைக்காதே. அவர் எங்கும் இருக்கின்றவர். அவர் இங்கெல்லாம் களைபறித்து வேலைசெய்கிறார் என்றால் அவரே செய்கின்றார் என்பது அல்ல, நம் போன்ற மக்களெல்லாம் இவ் வேலை-