பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

இளமையின் நினைவுகள்


களைச்- சோம்பல் இல்லாது ஒழுங்காகச் செய்கிறார்களா என்று அவர் மேலே பார்த்துக்கொண்டிருப்பார். சிலர் இது போலத் தோட்டங்களில் வேலைசெய்வது இழிவு என்று நினைக்கிறார்கள். அது தவறு. உழவுத்தொழில்தான் எல்லாவற்றிலும் மேலானது. இதைத் தவறாது ஒழுங்காகச் செய் கிறார்களா என்று அவர் சுற்றிச் சுற்றிப் பார்த்துக்கொண்டே மறைந்திருப்பார். அதனால்தான் எங்கும் யார் கண்ணுக்கும் அவர் தெரிவதில்லை. ஆகவே நாம் எந்த வேலை செய்தா லும் மனநிறைவுடன் தவறாது ஒழுங்காகச் செய்யவேண்டும்” என்றார்கள். எனக்கு அவையெல்லாம் சரியா தப்பா - அவர் பார்க்கிறாரா இல்லையா - என்பது பற்றி எல்லாம் ஆராய்ச்சி செய்யத் தெரியாது. இவை மட்டும் தெரிந்தன. உழவுத் தொழில் சிறந்ததென்பதும் அதைச் செய்யத் தயங்கலாகாது என்பதும், எத்தனை சிறுமைவாய்ந்த தொழிலாயினும் அதைச் செய்யத் தயங்கலாகாது என்பதும், எத்தனை சிறுமைவாய்ந்த தொழிலாயினும் அதைச் செய்ய ஏற்றுக்கொண்டால் ஒழுங்காகச் செய்துமுடிக்க வேண்டும் என்பதும் அப்படிச் செய்யாவிட்டால் கடவுள் தண்டிப்பார் என்பதும் அன்று என் மனதில் பதிந்துவிட்டன. செய்யும் கருத்தைத் திறம்பட ஒழுங்காகச் செய்பவன்தானே மனிதன்.

இங்கே பாட்டியின் மற்றொரு பாட்டும் நினைவுக்கு வருகிறது.

‘வெந்நீர் வளாவிவைத்தேன் விசிப்பலகை போட்டு
[வைத்தேன்
கோட்டைக்குப் போன ராசா வீடுவந்து சேரலியே
மாட்டின் குவளையிலே மாண்டானோ என் கணவன்
சேற்றின் குவளையிலே சேர்ந்தானோ என் கணவன்
நாலுகாலும் தொங்க தொங்க நடுவயிறு கொத்த
[கொத்த
போரானோ என்கணவன் பொன்னு ரதத்து மேலே’