பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. அன்னையும் அத்தனும் என்ன என் அன்னை தன் இளமையிலேயே பெற்றுவிட் டாள். அவளுக்குப் பதினைந்து வயது நிரம்பாமுன்னமே அவள் தாயாள்ை. பாட்டருைக்கும் பிற பெரியவர்களுக்கும் நான் பிறந்தது மகிழ்ச்சிதான் என்ருலும் பத்தொன்பது வயதான அத்தனும் பதினைந்து வயதான அன்னையும் என் பிறப்பை எப்படி ஏற்றுக்கொண்டார்களோ நான் அறியேன். என்னை வளர்க்க ஒரு பாட்டி வீட்டிலே இருந்தமையானும் என் அன்னையார் தமக்கைக்குக் குழந்தைகள் இன்மையாலும் நான் அவர்கள் கையில் அதிகமாகத் தவழ்ந்து விளையாடி வளர்ந்திருப்பேன். இளமை மணமும், அந்த இளமையிலே மகப்பேறு எய்துதலும் தவறு என்று இன்று பலர் பேசுகிருர் கள். என்ருலும் அந்தக்காலத்தில் என் அ ன் னை க் கு ப் பன்னிரண்டு வயதில் திருமணம், பதின்ைகு வயதில் சீமந்தம்', பதினைந்தாவது வயதில் குழந்தைக்குத் தாய் என்ற நிலைகள் ஏற்பட்டுவிட்டன. ஐந்து வயது வரை எனக்கு ஒன்றும் தெரியாது ஆதலாலும், பல பெரியவர்கள் வீட்டில் இருந்ததாலும் எனக்கு என் அன்னையையும் அத்தனையும் பற்றி அதிகமாக ஒன்றும் தெரியாது. . எனது ஐந்தாவது வயதில் என் பாட்டனர் இறந்து விட்டார். எனவே குடும்பத்தலை சாய்ந்தது என்னலாம். எனக்கும் அப்போது சிறிதுசிறிதாகப் புத்தியும் தெரியத் தொடங்கியது என நினைக்கின்றேன். உடன்பிறந்தவர்களா யிருந்த அன்னையும் பெரியன்னையும் மாறுபடத் தொடங்கி ஞர்கள். எனது அப்பாவுக்கும் என் பெரியப்பாவுக்கும் தனித்த முறையிலே நிலபுலன்கள் ஒன்றும் கி ை. யா து