பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உடன்பிறந்தார் சுற்றத்தார் 33


வினையால் தாம் வாழ வழிசெய்து கொள்வது அன்றாட நிகழ்ச்சியாக உள்ளது. கிராமங்களில் மட்டுமன்றிப் பெரும் அரசியல் அரங்கங்களிலும்கூட இந்தப் பிரித்துப் பயன் பெறும் சூழ்ச்சியைத்தானே காணமுடிகின்றது. எங்கள் சிறு கிராமம் அதற்கு விலக்காகுமா? எது எப்படியாயினும், ஒரு சிலர் எனது அன்னையையும், பெரியம்மாவையும் பிரித்தாளும் சூழ்ச்சியிலே வல்லவராகவே இருந்தார்கள். எனது பெரியம்மாவுக்குக் குழந்தைகள் கிடையா. எனவே எனது பெரியப்பாவை ஊரில் சிலர் வற்புறுத்தி மறுமணம் செய்து கொள்ளத் தூண்டினர்கள். என்றாலும் எல்லாச் சொத்துக்களும் என் பெரியம்மா பேரில் இருந்ததாலும், அவர்கள் இசையாத காரணத்தாலும் மணம் நடக்கவில்லை. ஆயினும் பெரியப்பாவுக்கு ஒரு அண்ணா உண்டாம். அவருக்கு ஒரு மகன் இருந்தானம். அவனைச்'சுவிகாரமாக வைத்துக்கொள்ளலாம் என்று பேசிக்கொண்டார்கள். என்றாலும் ஒன்றும் நடக்கவில்லை.

  அம்மாவுக்கும் பெரியம்மாவுக்கும் பொருள் பங்கிடுவது முதல் பலவற்றில் மாறுபாடுகள் தோன்றும். ஒரு சிறு உதாரணம் போதும் எனக்கருதுகிறேன். வீட்டிலுள்ள பித்தளை வெண்கலப் பாத்திரங்களையெல்லாம் பங்கிட்டுக் கொண்டார்கள். அதில் ஒரு நான்கு பாத்திரங்கள் கொண்ட துர்க்குக் கொத்து இருந்தது. அதை அப்படியே யாராவது ஒருத்தர் எடுத்துக் கொண்டிருக்கலாம். அதற்கு இருவருமே ஒப்பவில்லை. அன்று அதன் விலை ஐந்தாறு ரூபாய்க்குள் இருக்கலாம். அதை ஒருவர் எடுத்துக்கொண்டு பதிலுக்கு வேறொன்றை மற்றவர் எடுத்துக் கொள்ளலாம். ஆலுைம் அப்படிச் செய்ய ஒருவரும் விரும்பவில்லை. நான்கு பாத்திரங்களைப் பிணைத்திருந்த கம்பியை இரண்டாக்கினர்கள். இரண்டிரண்டு துண்டுகளாகப் பிரித்தார்கள். ஆளுக்கு