பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடன்பிறந்தார் சுற்றத்தார் 35 அப்பா அடிக்கமாட்டார்கள். பு துத் தின்பண்டங்கள் கிடைக்கும். பெரியவர்கள் கண்ணில் படாமல் சிலகாலம் ஒடி விளையாடலாம். இப்படி நானும் நினைப்பது உண்டு தான். விருந்தாக வந்தவர் ஐம்பது வயதுள்ள மூத்த பெண்மணி. அவர்கள் இன்று இல்லை. அவர்கள் பெயரும் வேண்டாம். அவருக்கு வேறு ஒரு உறவினரும் ஊரில் இருந்தார்கள். அவர்கள் எனது அம்மா உடல் நலமாக இல்லை என்று காண வந்தார்கள். அவர்கள் வந்தபோது அம்மா சற்று எழுந்து உலாவும் நிலை பெற்றிருந்தார்கள். காலையில் காப்பிவைப்பது வழக்கம். இந் த க் காலத் துக் காப்பிக் கொட்டைக்காப்பியை நான் இங்குக் குறிக்க வில்லை. சுக்கு மிளகு போட்டு, வெல்லமிட்டுப் பால்விட்டுக் காலையில் நாங் கள் குடிப்பது வழக்கம். இன்றும் காலையில் நான் அந்த வகைப் பாணமே அருந்திவருகிறேன். அன்று அம்மா அதற் கான சுக்குமிளகுத் துளையும் வெல்லத்தையும் கொண்டு வைத்தார்கள். வந்த வி ரு ந் தா ளி சுக்குக்காப்பி ைவ க் க அடுப்படியில் உட்கார்ந்தார்கள் அடுப் படிக்கு நேராகத் தாழ்வாரத்தில் ஒரு விசிப்பலகை இட்டி ருக்கும். அதில் நான் உட்கார்ந்து படிப்பது வழக்கம். அன்றும் அப்படித்தான் உட்கார்ந்து இருந்தேன். உள்ளே காப்பி வைக்க உட்கார்ந்த அம்மையார் நான் இருப்பதைக் கவனிக்கவில்லை. காப்பிக்கு வெல்லம் போதாது என்ருர்கள். அம்மா அறைக்குள் சென்று வேறு வெல்லம் எ டு த் து வந்தார்கள். அதற்குள் அந்த விருந்தாளி முன் கொண்டு வந்த வெல்லக் கட்டியை எடுத்து இடுப்பில் புடவை இடுக் கில் சொருகிக் கொண்டார்கள். பின் அதை அவர்களுக்கு வேண்டியவர்களிடம் சென்று சேர்த்திருப்பார்கள். ஆயினும் அம்மா வந்தவுடன் அந்த வெல்லத்தைக் காப்பியில் போட்டு விட்டதாகச் சொன்னர்கள். நான் திகைத்தேன்! இப்படியும் உறவினரா என்று. அதை நான் அம்மாவிடம் சொல்லவே