பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நல்லவர் யார் 41

நல்லவர் யார் 41 ததுதவருே சரியோ அதைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. அந்தப் பிள்ளைகளோடு சேர்ந்து பெயரைக் கெடுத்துக் கொண்டேன் என்பது தான்.அவர்களுடைய வருத்தம். செத்த நாயை உயிருள்ள நாய் என்று அந்த இரண்டு பிள்ளைகளும் ஊரில் எல்லாப் பிள்ளைகளிடமும் சொல்லிக் கேலி செய்வார்கள். அதல்ை தான் அம்மா மிகவும் கோபித்துக் கொண்டார்கள். அவர்களும் 'கெட்டவர்களோடு சேராதே" என்ருர்கள், ஆல்ை யார் நல்லவர், யார் கெட்டவர் என்று கண்டுபிடிக்க முடியாதே என்று திணறினேன். திக்கித்திக்கிப் பேசுபவர் நல்லவரா? அல்லது திட்டி அதட்டி நல்வழி காட்டுபவர் நல்லவரா? ஒன்றும் தெரியவில்லை. பின்னுல் நல்லவர் கெட்டவர்களைப் பற்றிப் பலப்பல பாடல்களையும் பாடங்களையும் படித்தேன். என்ருலும் இன்னும் நல்லவர் கெட்டவர்களைக் காணமுடியவில்லை. அன்று அம்மாவும், ஆசிரியரும் சொன்ன நல்லவர் யார்? என்ற வினவிற்கு இன்னும் விடை காண முடியவில்லை. பொதுவாக உள்ளத்தால் நல்லவரைத் தேடி அடைய வேண்டும் எனத் திருக்குறள் முதலிய பல நூல்கள் பறைசாற்றுகின்றன. உள்ளத்தை எதல்ை அளப்பது ? உதட்டாலா ? அம்மம்மா! வேண்டாம். வேண்டாம். ஆகா! மேடைமேல் ஒழுக்கத்தைப் பற்றித்தவருது பறைசாற்றுவதுபோல் பேசிப் பின் வாழ்வில் ஒழுக்கத்தைக் கனவிலும் கருதாதவர்கள் 'நல்லவர்களா ? உள்ளத்தை எவ்வாறு உணர்வது? எனி னும் நல்லவர்கள் இல்லாமல் இல்லையே! ஒருவர்கூட இல்லையானுல் வானம் பொய்த்து மழைவளம் கெட்டு அனைத்தும் அழியும் என்கிருர்களே ! 'பண்புடையார் பட்டுண்டு உலகம் அது இன்றேல் மண்புக்கு மாய்வது மன்' என்ற குறள் என் நினைவுக்கு வருகிறது. ஆகவே நல்லவர்