பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42 இளமையின் நினைவுகள்

42 இளமையின் நினைவுகள் வாழத்தான் வேண்டும். அந்த நல்லவரைக் காண்பது எப்படி? பாரதத்திலே ஒரு கதை உள்ளதாகக் கர்ண பரம்பரை வழக்கு உண்டே தருமபுத்திரர் உலகிலே கெட்டவரைத் தேடிக் காணுமல் அலுத்தார் என்றும், துரியோதனன் நல்ல வரைத் தேடிக் காணுமல் நின்ருன் என்றும், சொல்லுவர். அனைவரும் நல்லவர் கண்களுக்கு அனைவரும் நல்லவராகத் தெரிவர். அல்லாதவர் கண்களுக்கு அனைவரும் மற்றவராகத் தெரிவர். இதுவும் உண்மைதான? இன்றைய உலகில் நல்ல வரையும் கெட்டவரையும் இதன்படி பிரிக்க முடியுமா? கெட்டவர்கள் யார்? நல்லவர்கள் யார்? என்று எப்படிப் பிரிப்பது? உல கில் நடக்கும் கொடுமைகளுக்கெல்லாம் படித்த 'நல்லவர் தாமே காரணம். படித்தவர் நல்லவரா? அல்லாதவர் நல்லவரா? 'கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள் கற்றும், அறிவில்லாத என் கன்மத்தை என் (சொல்லுகேன்? என்ற அடிகள் எண்ணத்தக்கனவாம். இதற்கு முடிவு காண்பது எளிதன்று. யார் நல்லவர் என்று அறிஞர் உலகம் காணட்டும். 'கொல்லா விரதமெனக் கொண்டவரே நல்லோர்’ என்கின்ருர் தாயுமானவர். இல்ல இன்றைக்குப் பல பேரைக் கொன்று குவிக்கும் தலைவர்களையே எல்லோரும் நல்லவர் என்கின்றனரே ? எது சரி? எண்ணிப் பார்க்கட்டும்.