பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. அல்லி அர்ச்சுை

6. அல்லி அர்ச்சுை எங்களுரில் அப்போது மாவட்ட ஆரம்பப்பள்ளிக்கூடம் ஆரம்பித்துச் சில ஆண்டுகளே ஆயிற்று என்னலாம். அதற்கு முன் சாதாரணக் கிராமப் பள்ளிக்கூடம் தான் இருந்தது. அந்திப் போர்டு பள்ளிக்கூடத்தில் நான் சேர்ந்து படித்து வந்தேன். எனது தெரு நண்பர்கள் எப்போதும் என்னோடு கூட இருப்பார்கள். பள்ளிக்கூடத்துத் தலைமை ஆசிரியர் நடேச அய்யர் என்பவர். அவர் முதன் முதல் ஆரம்பிக்கப்பட்ட அந்தப் போர்டு பாடசாலையின் தலைமை ஆசிரியராய் வந்தவர். ஆதலால் அதை நன்ருக நடத்தி நல்ல பெயர் வாங்க முயன்றார். ஊரில் சிலரும் அதுவரையில் வராத பள்ளிக்கூடம் வந்ததால், அதை வளர்க்கவேண்டும் என்று முயற்சி செய்தார்கள். ஆசிரியர்கள் மூவர் அல்லது. நால்வர் இருந்தார்கள் என நினைக்கிறேன். ஐந்தாம் வகுப்பு வரை அப்பள்ளியில் இருந்தது. நான் அங்கேயே ஐந்தாவது வரை படித்தேன். என்றாலும் ஊரில் சிலர் அங்கே படிப்பு நன்ருக வராது என்றும், வாலாஜாபாத்தில் நன்ருகச் சொல்லிக்கொடுப்பார்கள் என்றும் தத்தம் குழந்தைகளை. இரண்டாவது மூன்ருவது வகுப்புகளுக்குக்கூடப் பாலாற்றைக் கடந்துசெல்லுமாறு ஏழு எட்டுவயதுடைய பிள்ளைகளை. வாலாஜாபாத் அனுப்புவார்கள். நானும் அவர்களோடு செல்ல விரும்பிய நாட்கள் பல உண்டு. என்ருலும் பின்னல் ஆரும் வகுப்புக்கு வாலாஜாபாத் சென்று படித்தபோது அதில் உள்ள தொல்லைகளை அறிந்தேன். அப்படி அங்கு அதிகமாக ஒன்றும் சொல்லிக் கொடுத்துவிடவில்லை. பாவம் இளம் வயதில் தொல்லைகளுக்குட்பட்டுச் சென்று படித்த என் நண்பர் சிலருடைய நிலை இரங்கத்தக்கதாகும்.