பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44 இளமையின் நினைவுகள்

44 இளமையின் நினைவுகள் நான் ஐந்தாம் வகுப்புவரை ஊரிலேயே அந்தப் போர்டு பள்ளியில் தான் படித்துக்கொண்டிருந்தேன். பள்ளி ஆசிரியர்கள் ஊக்கத்தோடு பாடம் சொல்லிக் கொடுப்பார்கள். சில புதுப்புதுப் பாட்டுகள் கற்றுத் தருவார்கள். இனிஸ்பெக்டர் வரும்போது சிறுசிறு நாடகங்கள் நடிக்கக் கற்றுத் தருவார்கள். அந்தக் காலத்தில் பள்ளிக்கூடத்துக்கு என்று புதிதாக வேறு கட்டடம் கட்ட ஆரம்பித்தார்கள் 'ஜில்லா போர்டார். எனவே மக்களுக்கெல்லாம் ஒரே மகிழ்ச்சி. நான்காயிர ரூபாயில் அமைந்த கட்டடம் அது. ஏதோ ஜில்லா போர்டார். தங்கள் சொந்தப் பணத்தைக் கொண்டுவந்து போட்டுக் கட்டடம் கட்டுவதாகவே கிராமத்தார் நினைத்தார்கள். அதுவரையில் அரசாங்கம் செலவு செய்து கட்டிய கட்டடம் ஒன்றும் ஊரில் இல்லையாதலால் அவர்களுக்கு ஒரே அதிசயமாகவே இருந்தது. மக்களிடத் தில் இருந்து வாங்கும் வரிப் பணத்தில் ஒரு பகுதியே இப்படி எத்தனையோ ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டடமாகவும், கால்வாய்த் துப்புரவாகவும், பிறவாகவும் வருகின்றது என்பதை அன்று அவ்வளவாக மக்கள் அறிய மாட்டார்கள். ஆல்ை இந்தக் காலத்தில் ஒவ்வொரு கிராமமும் தங்கள் வரிப்பணத்தில் பங்கு கேட்டுத் தத்தமக்கு வேண்டிய வசதிகளைச் செய்ய முன் நிற்கின்றது. அதற்கெனவே அரசாங்கமும் பஞ்சாயத்துச் சபைகள் அமைத்து அவற்றின் வழியே ஆண்டுதோறும் வரிப் பணத்தில் ஒரு பகுதியைக் கொடுத்து உதவுகின்றது. ஆல்ை அந்தக் காலத்தில் எல்லாம் பஞ்சாயத்துச் சபைகள் ஊர் தோறும் கிடையாது. நான் ஐந்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு நாடகம் நடத்த ஏற்பாடு செய்யப் பெற்றது. 'அல்லி அர்ச்சுளு என்ற நாடகமே அது. அந்தக் காலத்தில்