பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மத்தளத்தட்டு 53 களைக் கழித்து, துணி துவைத்து நீரில் மூழ்கிவிட்டு வருவது வழக்கம். அப்படியே அன்று காலையில் மாடுகளை ஒட்டிக் கொண்டு சென்றேன். எங்கள் வீட்டில் பயிர் எல்லாம் எடு பட்டதால் உழும் மாடுகளையெல்லாம் விற்றுவிட்டோம். பால் தயிருக்காக மட்டும் இரண்டொரு பசுக்களை வைத்துக் கொண்டிருந்தோம். அவற்றை ஒட்டிச் செல்வது வழக்கம். மாடுகள் மெதுவாகச் சென்று கொண்டிருந்தன. நானும் அ வ ற் றி ன் பின்னல் மெதுவாக அசைந்தாடிச் சென்று கொண்டே இருந்தேன். இடது கையை மடித்து வலது கையால் மத்தளத்தைத் தட்டுவதுபோல் தட்டிக்கொண்டு சென்றேன். வாய் ஏதோ ஒரு பாட்டை முணுமுணுத்துக் கொண்டிருந்திருக்கும். நான் அந்த நண்பர் வீட்டுத் தெரு வழியே செல்லும்போது அப்பெரியவர் திண்ணை மீது உட் கார்ந்திருந்தார். 'டே சிவானந்தம்' என்று அவர் கூப்பிட் டார். என்னை முழுப் பெயரோடு ஊரில் யாரும் அந்நாளில் கூப்பிடமாட்டார்கள். மேற்சொன்னபடிதான் கூப்பிடுவார் கள். வீட்டில் எனக்குப் பெயர் வைத்ததே ஒரு வேடிக்கை. எங்கள் குடும்பத்தில் சில தலைமுறைகளுக்கு முன்பு யாரோ ஒரு 'பரமசிவ முதலியார் என்ற ஒருவர் வாழ்ந்து வந்தா ராம். அவர் எங்கோ தெற்கே திருச்சிராப்பள்ளி சென்று தாசில்தார் உத்தியோகம்கூடப் பார்த்திருக்கிருராம். அந்தக் காலத்தில் ஹைதர்அலி, திப்புசுல்தான் சண்டைகள் நடந் தன போலும்; வெள்ளைக்காரர் உள்ளே நுழைந்த காலம். அவர் அந்தக் கலகம் நடைபெற்ற காலத்தில் வாழ்ந்தவராம். நான் இன்று முதல் மகாயுத்தமாகிய கலகம் நடக்கத் தொடங்கிய 1914ல் பிறந்தவன். எனவே அந்தக் கும்பினி யுத்தகாலத்தில் வாழ்ந்த பரமசிவமுதலியார்தான் இப்போது மறுபடியும் உலக யுத்த காலத்தில் வந்து பிறந்தார் என்று கருதி எனக்குப் பரமசிவம் எனப்பெயரிட்டார்களாம்.மேலும் ஆனந்த வருடத்தில் பிறந்தமையால் 'பரமசிவானந்தமாக்