பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மத்தளத்தட்டு - 55 தவற்றினை உணர்த்திவிடுவார். பெரியவர் சொன்னபடி நான் நடப்பதாகத் தலையசைத்தேன். ஆமாம் இனிமேல் இப்படிப் பார்த்தால் உதைதான் என மறுபடியும் எச்சரித்து அனுப்பினர். y - இதை நான் யாரிடமும் சொல்லவில்லை. ஆலுைம் அவர் இது பற்றி யாரிடமாவது பெருமையாகச் சொல்லி இருப்பார். அல்லது பக்கத்து வீட்டுத் திண்ணையில் உட் கார்ந்திருந்தவர்கள் கேட்டிருப்பார்கள்.அது எங்கள் அம்மா விற்கு எப்டியோ எட்டிவிட்டது. அவரைக் கேட்டார்களோ இல்லையோ எனக்குத் தெரியாது. மறுநாளிலிருந்து நான் அவர்கள் வீட்டுக்குப் போகக் கூடாது என்று கட்டளை இட்டு விட்டார்கள். திங்கள் கிழமை தோறும் பசனை நடக்கும். அதற்கு அந்த மத்தளக்காரர் தான் முன் நின்று எல்லாவற் றையும் செய்வார். நான் தவருது பசனைக்குப் போவேன். அம்மா அதுமுதல் அந்த பசனைக்கும் போகவேண்டாம் என்று கூறிவிட்டார்கள். எனக்கு எவ்வளவுதான் பாட்டுக் கேட்பதிலும் மத்தளம் தட்டுவதைக் காண்பதிலும் ஆசை இருந்தாலும் அம்மாவின் சொல்லை மீறமுடியாது; மீறில்ை அடி உதை கிடைக்கும் என்ற அச்சம் தான். அந் த க் காலத்தில் எல்லாம் அவர்கள் இப்படிக் கட்டுப்பாடு செய் கிருர்களே என்று அவர்கள் மேல் கோபித்துக்கொள்வது உண்டு. வெளியில் அல்ல; மனத்தில். என்ருலும் பின் புத்திவந்த பிறகு அவர்கள் செய்துவந்த ஒவ்வொன்றும் எனக்கு எவ்வளவு நல்லதாக முடிந்தது என உணர்ந்து அவர்களைத் தெய்வமாகப் போற்றி வழிபடுகிறேன். அன்று அந்தப் பெரியவர் தன் பையனைப்போல் நானும் மத்தளம் கற்றுக்கொண்டு கலையில் வல்லவனுக வரக்கூடாது என்ற எண்ணத்தில் அப்படி எச்சரித்தார். நான் அன்று