பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. சர்க்கரைப் பொங்கல் அந்த இளம் வயதில் எனது தாயார் எவ்வளவு கட்டுப்பாடுகள் செய்து வைத்திருந்தபோதிலும் நான் மற்றப் பிள்ளைகளோடு விளையாடுவதையே விரும்பினேன். அப் பிள்ளைகளுள் எனக்குப் பிடித்தமானவர் இரண்டொருவர் இருந்தனர். அவர்களோடு மாலை வேளைகளில் ஆற்றங் கரையிலும் ஆற்று மணலிலும் விளையாடுவது வழக்கம். ஒரு நாள் மாலை நானும் எனது நண்பரும் அவ்வாறு விளை யாடுவதற்கு ஆற்றங்கரைக்குச் சென்ருேம். மாலை ஐந்து மணி இருக்கும். கோயில் பூசை தொடங்க நாழி இருந்தது. நாங்கள் கோயிலுக்கு அருகில் சென்று பக்கத்து மணலில் உட்கார்ந்தோம். கோயில் உள்ளே நான்கைந்து பேர் உட் கார்ந்து கொண்டு ஏதேதோ பேசிக்கொண்டிருந்தனர். அந் நேர வேளையில் பேச்சுக் கேட்கவே நானும் என் நண்பரும் கூட அங்கு என்ன நடக்கிறது என்ற விரும்பினுல் உள்ளே காணச் சென்ருேம். முன் மண்டபத்திலே அப்போது தரும கர்த்தா'வாக இருந்த ஒரு பெரியவரும் அவருக்குத் துணை யாட்கள் என்று பேசிக் கொள்கின்ற மற்ற இருவரும் உட் கார்ந்திருந்தார்கள். கோயிலில் பூசைசெய்யும் ஐயர் இரண்டு தட்டுகளில் சூடாக எதையோ கொண்டு வந்து வைத்தார். அவர் வைத்த வேளையும், நாங்கள் உள்ளே சென்ற வேளை யும் ஒன்ருக இருந்தன, எங்களைக் கண்ட தருமகர்த்தாவுக்குக் கோபம் உண்டாயிற்று. 'சனியன்கள் எங்கிருந்து வந்து விட்டன என்று கூப்பாடு போட்டார். பூசை வேளை இல்லையே! ஏனடா கதவைத் திறந்தாய்' என்று தூரத்திலி ருந்த வேலைக்காரன் மேல் எரிந்து விழுந்தார். அவன் பாவம் அப்போதுதான் ஒடிக் கதவை அடைக்க முயன்ருன்.