பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சர்க்கரைப் பொங்கல் 61 என்று பேசிக்கொள்வார்கள். அந்தோ மக்கள் சமுதாயத்தை வாழவைக்க வந்த அந்தக் கோயில்கள் காரணமாக இப்படிச் சமுதாயங்களே பிளவுபடுவானேன்? அந்தக் கோயிலுக்கு உள்ள நிலபுலன்கள்தாம் காரணம். இந்த நிலையில் எனது பாட்டன்மார் கோயிலுக்கு அதிகமாக நிலங்களைத் தானம் செய்துள்ளமையின் அவர்களையும் மனமாரச் சபித் தேன். வேறு என்ன செய்யமுடியும்? இப்படி நன்மை செய் வதைவிடுத்துத் தீமையை விரும்பினுல் பிஞ்சுள்ளம் நையாது என்ன செய்யும்? கோயில் தூய்மையான இடம். அங்கே அறச் செய லன்றி வேறு கொடுமைகள் நடைபெறலாகாது. சமுதாய வாழ்வின் அடிப்படையே கோயில். அங்கு மக்கள் தீமையை மறந்து அறவழி நின்று ஒழுங்காகச் செயலாற்ற வேண்டும். அவ்வறங்களை மேற்பார்க்கும் பண்புடையவரே அறக்காப் பாளர். ஆனல் வேலியே பயிரை மேய்வதுபோல அவரே இது போன்ற கொடுமைகளைச் செய்தால் அறம் வாழ்வது எங்கே? அறத்தின் வழி மக்கள் சமுதாயம் செழித்துச் சிறப்பது எங்கே? எண்ணிப்பாருங்கள்.