பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிட்டாய்ச் சண்டை 63 பெற்று அந்தச் சொத்துக்கு உரியவர்களாக்க வேண்டும் என முடிவு செய்தார். ஊரில் பல ந ல் ல வ ர் க ளு ம் அவருக்குத் துணையாக இருந்தார்கள் என்பர். என் பாட்ட ஞர் எழுத்திலும் அவரவர் விருப்பம்போல் சொத்தைச் செல விடலாம் என இருந்தது. என்ருலும் சொத்துக்கள் அனைத் தும் என் பெரியம்மா பேரில் இருந்ததால் அவர் வற்புறுத்த வில்லை. இப்படிப் பக்கத்து வீட்டில் வாழ்ந்த இரு உடன் பிறந்த தாயர்களும் வாழ்ந்து வந்தார்கள். எனினும் அவர்கள் மனம் வேறுபட்டே வாழ்ந்து வந்தார்கள். முன் பாகப் பிரிவினையில் அவர்கள் கொண்ட வேறுபாட்டை ஊரிலுள்ளவர்கள் மேலும் வளாத்துவிட்டார்கள் என்பர். எனவே உடன்பிறந்த சகோதரிகள் இருவரும் மிகக் கொடிய வி ரோ தி க ளா க மாறிவிட்டார்கள். என்ருலும் என் பெரியம்மா மாத்திரம் என்னைக் கண்டால் அன்பாகக் கூப்பிடுவார்கள். என் அம்மா என்னைத் திட்டமாக அந்த வீட்டுப் பக்கம் கால் எடுத்து வைக்கக்கூடாது என்று கட்டளை இட்டிருந் தார்கள். ஆகவே நான் அந்தப்பக்கம் திரும்பினதுகூடக் கிடையாது. அப்படித் திரும்பிப் பார்த்தாலும் உடனே யா ரா வ து அம்மாவிடம் வந்து 'கோள்' சொல்லி விடுவார்கள். அன்று முழுவதும் நான் உதை வாங் க வேண்டியவன்தான். ஆகவே மிகவும் பயந்துபயந்து நான் நடந்துவந்தேன். நான் ஒரே பிள்ளை ஆலுைம் அம்மா என்னை அடித்து வளர்க்க அஞ்சமாட்டார்கள். ஒருநாள் நான் தெருவோடு வந்துகொண்டிருந்தேன். பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டிற்குத் தி ரு ம் பி ய நான் தெருவில் பெரியம்மா நின்றுகொண்டிருப்பதைக் கண்டேன். பக்கத்தில் எதிர்வீட்டுப் பாட்டியும் உடன் நின்றுகொண்