பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிட்டாய்ச் சண்டை 65 சென்று அம்மாவிடம் இன்று சிவானந்தம் பள்ளிக்கூடத் திற்கு மிட்டாய் கொண்டு வந்தான்; யாவருக்கும் கொடுத் தான்' என்று சொல்லிவிட்டுப் போனன். அதற்காகத்தான் அவன் முன்னே ஓடிவிட்டான் என்பது பிறகு தெரிந்தது. நான் வீட்டிற்குச் சென்றதும் அம்மா என்னைக் கையில் கொம்புடன் வரவேற்ருர்கள். ஆயர்பாடிக் க ண் ண னை அதட்டுவதுபோல யதோதை கையில் கொம்புடன் நிற்பதா கப்படம் போட்டிருக்கும் 'காலண்டர்’களைப் பின்னுல் பார்த்தி ருக்கிறேன்.அதில் கண்ணன் பயப்படுவது போலப்பாசாங்கு செய்கிருர். நா ே ைஉண்மையாகவே பயப்பட்டேன். என்னைப் பற்றி ஈர்த்து, மிட்டாய் ஏது?’ என்ருர்கள். நான் 'எனக்கு மிட்டாயைப் பற்றி ஒன்றும் தெரியாது' என்று பொய் சொல்லி வைத்தேன். ஆனல் அவர்கள் விடுபவர் களல்லர். வெளியார் யாராயிருந்தாலும் கூடப் பன்னிப் பன்னி மடக்கி மடக்கிக் கேள்விகள் கேட்டு எப்படியும் உண் மையான பதிலை அவர்கள் வரவழைத்து விடுவார்கள்; ஆகவே நான் தப்புவது எப்படி? 'பொய் சொல்லாதே' என்று சொல்லிக் கொம்பால் ஒரு அடி கொடுத்தார்கள் என்ருலும் நான் உண்மையைச்சொல்ல வில்லை. அம்மாவின் கோபம் உச்ச நிலைக்குச் சென்றது. அ டி மே ல் அடி விழுந்தது. அருகிலிருந்த பாட்டியோ "ஐயோ ஏனடி குழந்தையைக் கொல்லுகிருய்?' என்று கூச்ச லிட்டுக் கொண்டே இருந்தார்கள். ஆலுைம் தாயார் விடுவ தாக இல்லை. கடைசியில் அ ந் த க் கொடுமைக்கு ஆற்ருது மிட்டாய் வந்த வழியைச் சொல்லிவிட்டேன். 'பாவி ! அதை ஏன் வாங்கிய்ை? விஷமிட்டாளோ என் னமோ என்று வ்ைது மேலும் இரண்டடி கொடுத்தார்கள். பின் அவர்கள் கோபம் பெரியம்மா பேரில் திரும்பியது. தெருமுன் சென்று பலவாறு பழித்துப் பேசினர்கள். ஆடு