பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 இளமையின் நினைவுகள் நான் அழைத்துவரப்பெற்று அந்த இந்துமத பாடசாலையில் மூன்று ஆண்டுகள் கல்வி பயின்றேன். பயின்ற அந்த ஆண்டுகள் மூன்றில் நான் பெற்ற அனுபவங்கள் பல. ஒரு சில இன்றும் உள்ளத்தைவிட்டு நீங்காமல் இருக்கின்றன. அவற்றுள் ஒன்றைக் காணலாம். நான் ஆரும்வகுப்புப் படித்துக்கொண்டிருந்த நாட்களில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்று இன்று நினைவுக்கு வருகிறது. ஆங்கிலத்துக்கு ஒருவர், கணக்குக்கு ஒருவர், பிற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவர் என்று இப் படி ப் பல ஆசிரியர்கள் எனக்குப் பாடம் சொல்ல வருவார்கள். ஒவிய ஆசிரியரும் ஒருவர் வருவார். அவர் வயதில் இளையவர். எட்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு, அப்பொழுதுதான் ஒவியம் கற்றுத்தரவும் தேர்ச்சி பெற்று அந்தத் துறைக்கு ஆசிரியராக வந்தவர். அவர் இளமை முடுக்கோடு இருந்த மையால் பிள்ளைகளை அதட்டிக்கொண்டே இருந்தார். அந்தப் பள்ளியில் அக்காலத்தில் ஒரே திறந்த வெளி மண்டபத்தில் மூன்று வகுப்புகள் இருக்கும். இவர் போடும் சத்தத்தால் பக்கத்தில் உள்ள ஆசிரியர்களால்கூடச் சில சமயங்களில் பாடம் நடத்தமுடியாமல் போய்விடும். என்ரு லும் அவர் புது முடுக்கோடு படங்கள் போட்டுக்கொண்டே இருந்தார். ஒரு நாள் அவரிடம் நான் அகப்பட்டுக் கொண்டேன். எனக்கு டிராயிங் என்ருல் தெரியவே தெரியாது. பூனை போடச் சொன்னுல் கோடுதான் போடுவேன். பாவம்! அவர் என்ன செய்வார்? சொல்லிச் சொல்லிக் கொடுப்பார்; கரும் பலகையில் போட்டுப் போட்டுக் காண்பிப்பார். என்னிடம் வந்து பலமுறையும் சொன்னர் என்றுதான் நினைக்கிறேன். எனினும் எனக்கு அதுபற்றி ஒன்றும் புரியவில்லை. பகல் மூன்ருவது பகுதி வகுப்பு. மணி பதினென்று ஆகி