பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்னம் வீங்கிற்று 71 யிருந்தது. அவருக்கு, இளமையின் முடுக்குக் கிடையில் நான் சொன்னபடி செய்யாததும் கோபத்தை கிளரிவிட்டிருக்கும். என்னை அழைத்தார்; நான் நடுங்கிக்கொண்டே அருகில் சென்றேன். என் கையில் இருந்த டிராயிங் நோட்டைப் பற்றி இழுத்துத் தூர வீசி எறிந்தார். அது அடுத்த வகுப் பில் போய் விழுந்தது. எல்லா வகுப்பு மாணவர்களும் திகைத்தார்கள். திடீரென்று ஒரு சத்தம் கேட்டது. யாவருக்கும் ஒன்றும் புரியவில்லை. அந்தச் சத்தம் என்ன வென்று கேட்கிறீர்களா? வேறென்றுமில்லை. அவர் ஒங்கி என் கன்னத்தில் அடித்த அடியின் எதிரொலிதான் அது. அனைவரும் திகைக்க, நான் அப்படியே என் கன்னத்தைப் பிடித்துக்கொண்டேன்; அழுகை வந்தது: தேம்பித் தேம்பி அழுதேன். ஆனல் அவர் கோபம் தணிந்தவராகக் காணுேம். வகுப்பில் அழவேண்டாம் என எச்சரித்தார். எனக்கு அவர் சொல்வது ஒன்றுமே புரியவில்லை. அழுவதைத் தவிர வேருென்றும் முடியவில்லை. அந்த வேளையில் அவர் என்னைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினர். நான் அழுது கொண்டே வாயில்படியில் நின்றிருந்தேன். என்ருலும் என் நிலை என்னிடம் இல்லை என உணர்ந்தேன். எத்தனை நேரம் நின்றிருந்தேனே, எனக்கே இன்றும் புரியவில்லை. மணி ஒலி கேட்டது. வகுப்பு விடும் சமயம். போகும் எல்லா வகுப்பு ஆசிரியர்களும் என்னிடம் இர்க்கம் காட்டுவது போன்று பார்த்துக்கொண்டே சென்ருர்கள். எப்படியோ அந்த இளமையிலும் அவமானம் என்னை வந்து பற்றிக் கொண்டது. அந்த வெய்யில் வேளையில் வகுப்பறைக்குச் சென்று என் பாடப் புத்தகங்களையும் எடுத்துக்கொள்ளாமல் நேரே வீட்டுக்குப் புறப்பட்டுவிட்டேன். நல்ல வெய்யில் வேளை. பகல் ஒரு மணி. நான் வீங்கிய கன்னத்தோடு விடுவந்து சேர்ந்தேன். என்னை அந்த வேளை