பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 இளமையின் நினைவுகள் யில் அன்னையும் பாட்டியும் எதிர்பார்க்கவில்லை. என் முகம் கலங்கி இருந்தது. கன்னம் வீங்கி இருந்தது. இருவரும் ‘என்ன, என்ன? என்று கேட்டார்கள். நான் ஒன்றும் சொல்லவில்லை. ஒ' என்று கதறினேன். என் தாயார் என்ன நையப்புடைத்து நல்வழியில் திருத்த முயல்பவர்கள்தாம். ஆயினும் மற்ருெருவர்.ஆசிரியர் ஆயினும்.என்னை அடித்தால் பொறுக்கமாட்டார்கள். என் முகத்தைத் துடைத்து, அழைத் துச் சென்று உணவு ஊட்டினர்கள். அப்படியே உண்டு உறங்கிவிட்டேன். மாலை ஐந்து மணிக்குக் கண்விழித்தேன். எதிரில் என் வகுப்பில் படிக்கும் தங்கவேலு என்ற எங்கள் ஊர் மாணவன் நின்றுகொண்டிருந்தான். பக்கலில் அம்மா பரிவோடு அவன் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். தங்கவேலு பள்ளியில் நடந்த எல்லாக் கதையையும் சொல்லிவிட்டு, நான் எடுத்து வராது விட்டிருந்த நூல்களையும் கொண்டு வந்து கொடுத்தான். எல்லாவற்றையும் கே ட் ட றி ந் த தாயாருக்கு அந்த ஆசிரியர் மீது கோபம் வந்தது. எதிரில் இருந்திருந்தால் இரண்டு அடிகூடக் கொடுத்திருப்பார்கள். அப்போதும் வீங்கி இருந்த என் கன்னத்தைக் கையால் தடவினர்கள். அவர்தம் கண்கள் நீரைச் சொறிந்தன. படிப்பு இல்லாவிட்டாலும் கவலையில்லை. இனி நீ பள்ளிக்கூடம் போய் இப்படி அடிபட வேண்டாம் என்று சொல்லி, தங்கவேலுவிடம் நாளையிலிருந்து நான் பள்ளிக் கூடம் வரமாட்டேன் என்பதையும் கூறி அனுப்பிவிட் டார்கள். நான் செய்வதறியாது திகைத்தேன். என்ருலும் என் அம்மா சொன்னதை யாராலும் மா ற் ற முடி யா து. ஆதலால் மறுநாளில் இருந்து பள்ளிக்கூடம் கிடையாது என்பதை உறுதி செய்துகொண்டேன். -